தம்பால்
தம்பால் (Dambal) தம்பாலா எனவும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான கருநாடாகாவின் கதக் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமமாகும். இது பௌத்த மதத்தின் ஒரு பண்டைய மையமாக இருந்தது. மேலும், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது. [1] இது கடல்மட்டத்திலிருந்து 590 மீ (1,940 அடி) உயரத்தில் உள்ளது. [2]
தம்பால்
Dambal | |
---|---|
அடைபெயர்(கள்): கிராமம் | |
ஆள்கூறுகள்: 15°19′41″N 75°48′37″E / 15.32806°N 75.81028°E | |
Country | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | கதக் மாவட்டம் |
[வட்டம் | முந்தர்கி |
மக்களவைத் தொகுதி | ஆவேரி - கதக் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
ஏற்றம் | 590 m (1,940 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 10,095 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐஎன்-கேஏ |
இணையதளம் | karnataka |
புள்ளிவிவரங்கள்
தொகு2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி, தம்பாலாவில் 5,166 ஆண்களும், 4,929 பெண்களும் என 1,815 குடும்பங்களுடன் 10,095 மக்கள் உள்ளனர்.[3]
வரலாறு
தொகுமௌரியர்கள் மற்றும் சாதவாகனர்களின் ஆட்சிக் காலத்தில் சேர்ந்த, கௌதம புத்தரின் போதனைகள் கருநாடகாவில் செழித்து வளர்ந்தன. ஏராளமான புத்த நினைவுச்சின்னங்கள் நகரத்தை சுற்றிலும் சிதறிக்கிடக்கின்றன. [4]
தம்பாலில் உள்ள பௌத்த தெய்வமான தாராவின் கோவிலில், கி.பி 1095 தேதியிட்ட ஒரு கல்வெட்டு உள்ளது. தாரா தெய்வத்திற்காக 16 வணிகர்களால் கோயில் ஒன்றும், பௌத்த பிக்குகளுக்கான விகாரம் ஒன்றும் எழுப்பப்பட்டது. இந்து சமயம் வளர்ந்து வரும் சூழ்நிலையிலும் பௌத்தம் ஒன்றுசேர்ந்திருந்தால், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தம்பாலில் ஒரு பௌத்த மையம் இருந்தது. [5]
தொட்டபசவப்பா கோயில்
தொகுஇங்கு மூன்று இந்து கோவில்கள் உள்ளன. தொட்டபசவப்பா கோயில் மேலைச் சாளுக்கியக் பாணியிலானது. மேலும், விமானம் இருபத்தி நான்கு புள்ளிகள் கொண்ட நட்சத்திரத் திட்டத்தைக் கொண்டுள்ளது. மேலும், இது பல நட்சத்திர புள்ளிகளையும் கொண்டுள்ளது. [6] ஒவ்வொரு வலது கோணமும் நான்கு 22.5 டிகிரி கோணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு கோணமும் மீண்டும் பிரிக்கப்பட்டு சிக்கலான செதுக்கல்களால் மூடப்பட்டுள்ளது. [7]
ஜப்பட்பாவி
தொகுசமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோயில் கிணறு ஒன்றை உள்ளூர்வாசிகள் ஜப்பட்பாவி என்று அழைக்கின்றனர்
கப்பாட்டா குடா
தொகுகப்பாட்டா குட்டா மலை தம்பாலுக்கு மிக அருகில் உள்ளதுலிருந்து 5 மைல் தொலைவில் உள்ளது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Buddhist Legacy – Buddhism in Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2006-12-18.
- ↑ "Dambal, India Page". பார்க்கப்பட்ட நாள் 2007-01-25.
- ↑ "Census of India: View Population Details". Censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2013-01-20.
- ↑ "Kamat Research Database - Buddhist System of Education". பார்க்கப்பட்ட நாள் 2007-03-12.
- ↑ "The Buddhist Legacy". பார்க்கப்பட்ட நாள் 2007-03-12.
- ↑ "Architecture of the Indian Subcontinent". Archived from the original on 2015-05-02. பார்க்கப்பட்ட நாள் 2006-12-18.
- ↑ "Dodda Basappa temple - 12th century". Archived from the original on 2022-01-02. பார்க்கப்பட்ட நாள் 2006-12-19.
வெளி இணைப்புகள்
தொகு- History of Indian Art
- Rahman, Mahbubur (2012). "Architecture". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- Deccan-herald: Dambal
- Dambal a religious symphony
- Dusty Dambal? Think again!