அன்னிகேரி
அன்னிகேரி (Annigeri) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தர்வாட் மாவட்டத்தின் ஒரு வட்டமாகும். ஹூப்ளிக்குச் செல்லும் வழியில் கதக் - பெட்டகேரிக்கு மேற்கே 20 கி.மீ தொலைவிலும், ஹூப்ளியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
அன்னிகேரி | |
---|---|
நகர்ம | |
அமிர்தேசுவரர் கோயில், அன்னிகேரி | |
ஆள்கூறுகள்: 15°26′N 75°26′E / 15.43°N 75.43°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தார்வாட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.1 km2 (4.3 sq mi) |
ஏற்றம் | 624 m (2,047 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 25,709 |
• அடர்த்தி | 2,316.13/km2 (5,998.7/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 582 201 |
தொலைபேசிக் குறியீடு | 08380 |
வாகனப் பதிவு | கேஏ-25 |
அறிமுகம்
தொகுஅன்னிகேரி, புகழ்பெற்ற கன்னடக் கவிஞர் ஆதிகவி பம்பாவின் பிறந்த இடமாகும். மேலும், மேலைச் சாளுக்கியர்களால் கட்டப்பட்ட கருங்கல் கோயிலுக்கும் நன்கு அறியப்பட்டதாகும். [1] இக்கோயில் அமிர்தேசுவரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. [2] சமண மதத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலும் உள்ளது. பனிகங்கரி, பசப்பா, கஜினா பசப்பா மற்றும் அனுமன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களும் உள்ளன. இரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு பழங்கால வீர சைவக் கோயிலும் உள்ளது. அன்னிகேரியில் ஏழு பள்ளிவாசல்களும், இரண்டு வீர சைவ மடங்களும் உள்ளன .
வரலாறு
தொகுஅன்னிகேரி கடந்த காலத்தில் ஒரு முக்கியமான அரசியல் மற்றும் கலாச்சார மையமாக இருந்தது. [3] சாளுக்கிய வம்சம், தேவகிரி யாதவர்கள் ,போசளர்கள் போன்ற பல்வேறு மன்னர்கள் இந்த நகரத்தை இணைத்தனர். இது ஒரு காலத்தில் கலாச்சூரிகளின் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
அன்னிகேரி சாளுக்கிய அரசன் நான்காம் சோமேசுவரனின் ஆட்சி காலத்தில் கடைசித் தலைநகராக இருந்தது. (பொ.ச.1184-89) [4] மேலும், இது புகழ்பெற்ற பணக்கார மாகாணமான பெல்வோலா -300 இன் தலைமையகமாகும். [5]
நவீன கர்நாடக மாநிலத்தில் மேலைச் சாளுக்கிய கட்டிடக்கலை நடவடிக்கைகளின் முக்கிய பகுதியின் கீழ் அன்னிகேரி வருகிறது. கல்யாணி சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கிய கட்டிடக்கலை) கட்டிய மிகச்சிறந்தவற்றில் அமிர்தேசுவரர் கோயில் அடங்கும்.
1157 ஆம் ஆண்டில் இரண்டாம் பிஜ்ஜலாவின் கீழ் கலாச்சூரிகள் பசவகல்யாணைக் கைப்பற்றி அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அதை ஆக்கிரமித்தனர். சாளுக்கியர்கள் தங்கள் தலைநகரத்தை இன்றைய தார்வாட் மாவட்டத்தில் உள்ள அன்னிகேரிக்கு மாற்றும்படியும் கட்டாயப்படுத்தினர்.
முதன்மை மற்றும் வேதக் கல்வியை வழங்க, இங்கு ஐந்து பிரம்மபுரிகள் இருந்துள்ளது. [6]
அன்னிகேரி மண்டை ஓடுகள்
தொகு2010 ஆம் ஆண்டில், இப்பகுதியிலுள்ள ஒரு வடிகாலில் 100க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பூர்வாங்க கோட்பாடுகளின்படி, இப்பகுதி சுமார் 150-200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுமக்களின் கல்லறையாகவோ, அல்லது அது ஒரு போர்க்களமாகவோ இருந்திருக்கலாம். [7] மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இந்திய தொல்பொருள் துறை அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டனர். கர்நாடக அரசு அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்டது. அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு, 471 மண்டை ஓடுகள் கிடைத்தன. 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளிலோ அல்லது வரலாற்றிலோ ஒரு படுகொலை நடந்ததாக எதுவும் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்தனர் . [8]
அன்னிகேரியின் சிறந்த ஆளுமைகள்
தொகுஆதிகவி பம்பா
தொகுஅன்னிகேரி, கன்னட கவிஞரான ஆதிகவி பம்பாவின் பிறப்பிடமாகும். [9]
- பெஞ்சமின் லோரிஸ் என்பவர் முதன்முதலில் பம்பா பற்றி எழுதி 1882 இல் பம்பா பாரதத்தை வெளியிட்டார்.
- எஸ்.ஜி. நரசிம்மச்சார் 1900ஆம் ஆண்டில் ஆதி புராணத்தை வெளிக் கொணர்ந்தார்.
- கன்னட இலக்கிய மன்றம் 1931இல் பம்பா பாரதத்தின் திருத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டது.
- கர்நாடக அரசு பம்பா அறக்கட்டளையை அன்னிகேரியில் நிறுவியது
- அம்பி, கன்னட பல்கலைக்கழகம் பம்பா நினைவாக நாடோஜா விருதை நிறுவினார்
சுற்றுலாத் தலங்கள்
தொகுஅமிர்தேசுவரர் கோயில் [10] தர்வாட் மாவட்டத்தில் பொது ஊழி 1050இல் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது. இது சோப்புக்கல்லால் கட்டப்பட்ட முதல் கோயிலாகும்.
இந்தக் கோயில் மேலைச் சாளுக்கியப் பாணியில் உள்ளது. கோவில் 76 தூண்கள் உதவியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் சுவர்களில் புராணக் கதைகளின் உருவங்ககள் செதுக்கப்பட்டுள்ளன.
நிலவியல்
தொகுஅன்னிகேரி 15.43 ° வடக்கிலும் 75.43 ° கிழக்கிலும் அமைந்துள்ளது . [11] இதன் சராசரி உயரம் 624 மீட்டர் (2047 அடி) ஆகும்.
புள்ளிவிவரங்கள்
தொகு2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[12] அன்னிகேரியின் மக்கள் தொகை 25,709. ஆண்களில் மக்கள் தொகையில் 51%, பெண்கள் 49%. அன்னிகேரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 55% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; 61% ஆண்களும், 39% பெண்களும் கல்வியறிவு பெற்றவர்கள். மக்கள் தொகையில் 14% 6 வயதுக்குட்பட்டவர்கள்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Chalukyan magnificence". Archived from the original on 17 July 2008. Retrieved 2008-08-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Kalyani Chalukyan temples". Retrieved 2008-08-30.
- ↑ "Dharwad (Annigeri) Travel". Archived from the original on 18 December 2008. Retrieved 2009-01-16.
- ↑ "Places Around Dharwad". Retrieved 2009-01-16.
- ↑ "Chapter XIV, Karnataka, The Tourist Paradise". Archived from the original on 2009-03-04. Retrieved 2008-08-30.
- ↑ "Education in Karnataka through the ages". Jyotsna Kamat. Retrieved 2009-03-05.
- ↑ Srikant Hunasvadi (2 September 2010). "Theories galore as skulls are found in Annigeri drain". DNA. Archived from the original on 7 September 2010. Retrieved 2010-09-03.
- ↑ Girish Pattanashetti (2011-03-08). "At Annigeri, a rare find of human skulls". தி இந்து. Archived from the original on 10 March 2011. Retrieved 2011-03-08.
- ↑ "Poet Pampa". Retrieved 2009-01-16.
- ↑ Hardy. The Amrtesvara Temple at Annigeri. Retrieved 2008-08-30.
- ↑ Falling Rain Genomics, Inc - Annigeri
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
வெளி இணைப்புகள்
தொகு- The Chalukyan Magnificance from the Deccan-Herald
- Indian Temple Architecture: Form and Transformation
- Kalyani Chalukyan temples [1]
- Annigeri skulls
- Annigeri skulls
- In studying Annigeri skulls, a collision of histories
- Annigeri skulls find support in history pages
- Annigeri skulls
- Historian unearths sacrificial sect theory on Annigeri skulls