குக்கனூர் (Kuknoor) [1] என்பது இந்திய மாநிலமான கருநாடகாவின் கொப்பள் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது ஹோஸ்பேட்டிலிருந்து வடமேற்கே 40 கி.மீ தொலைவிலும், குக்கனூர் கல்லேஸ்வரத்திலுள்ள மகாதேவர் கோயிலிலிருந்து 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. குக்கனூர் இராஷ்டிரகூட, சாளுக்கிய பாணி கோயில்களுக்கு பெயர் பெற்றது. இதில் நவலிங்க கோயில்கள் குறிப்பிடத்தக்க கோயிலாகும். [2] [3] [4]

குக்கனூர்
குக்கனூரு
நகரம்
நவலிங்க கோயில்கள்
நவலிங்க கோயில்கள்
குக்கனூர் is located in கருநாடகம்
குக்கனூர்
குக்கனூர்
கர்நாடகாவில் குக்கனூரின் அமைவிடம்
குக்கனூர் is located in இந்தியா
குக்கனூர்
குக்கனூர்
குக்கனூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°29′23″N 75°59′38″E / 15.48972°N 75.99389°E / 15.48972; 75.99389
Country இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்கொப்பள்
பெயர்ச்சூட்டுகுந்தல்புரம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்15,718
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
583232
தொலைபேசிக் குறியீடு08534
வாகனப் பதிவுகேஏ 37
அண்மை நகரம்கொப்பள்
மக்களவைத் தொகுதிஎலபர்கா
காலநிலைதட்பவெப்பம் (கோப்பென் )
இணையதளம்www.yelburgatown.gov.in/tourism

வரலாறு

தொகு

குக்கனூர் இடைக்காலத்தில் போது ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. பொ.ச. 8 முதல் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாளுக்கிய பாணியில் கட்டப்பட்ட நவலிங்க கோயில் உட்பட பல வரலாற்று இடிபாடுகள் உள்ளன. மற்ற முக்கியமான தளங்களில் கல்லேசுவரர் மற்றும் மல்லிகார்ச்சுனர் கோயில்களும் அடங்கும் . [5] [6]

 
நவலிங்க கோவில்களில் காணப்பட்ட பழைய கன்னட கல்வெட்டு

புள்ளிவிவரங்கள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குக்கனூரின் மக்கள் தொகை 18,033 ஆகும். இதில் 9,075 ஆண்களும் 8,958 பெண்களும் உள்ளனர். [3]

கோயில்கள்

தொகு

குக்கனூர் பல முக்கியமான கோயில்களைக் கொண்டுள்ளது.

மகாமாயா கோயில்

தொகு

மகாமாயா கோயில் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதைப் பற்றிய குறிப்புகள் இந்திய காவியமான இந்தக் கோயிலின் கர்ப்பக்கிருகம் மூன்று தெய்வங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவற்றிலுள்ள சிலைகளில் இரண்டு பெண்தெய்வங்களான இலட்சுமியும் பார்வதியும் (மகாமாயா), ஒரு ஆண் தெய்வமான ஹரிஹரனும், (அதாவது பாதி- சிவன் மற்றும் அரை- விஷ்ணு ) அடங்கும். அனைத்து 3 சிலைகளும் வடக்கு நோக்கி வழக்கமான நோக்குநிலைக்கு மாறாக, தெற்கே முகம் காட்டுகின்றன. இது போன்ற தெற்கு நோக்கியிருக்கும் சிலைகள், பெரும்பாலும் சக்திவாய்ந்தவை என்று கருதப்படுகின்றன.

மகாபாரதத்திலுள்ள குறிப்புப்படி இந்ந்த கோவில் கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்படிருக்கலாம் என்கிறது. புராணக் கதைகளின்படி மகாமாயா கோயிலுக்கு கீழே காளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிலத்தடி கோயில் உள்ளது. இந்த கோயில் காவியத்தின் நிகழ்வுகளில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஏனெனில் இது ஒரு வகை நரபலியைக் கொண்டிருக்கலாம். நவீன வரலாற்றில், அதைக் கண்டுபிடிப்பதற்கான திட்டங்கள் இருந்தன. ஆனால் தீய சக்திகள் வெளிவந்து விடும் என்று கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அவை கைவிடப்பட்டன.

குடனேசுவர் கோயில்

தொகு

குக்கனூருக்கு அருகில் அமைந்துள்ள புளிய மரங்களால் சூழப்பட்ட கோயில் ஒன்று உருத்ரமுனிசுவரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் சமூக நலப் பணிகளை மேற்கொண்ட இவர், பின்னர் குடனேசுவர் என்று அழைக்கப்பட்டார்.

 
நவலிங்க கோயில் முற்றம்
 
நவலிங்க கோயிலின் உட்புறம்
 
நவலிங்க கோயிலின் வாயில்

இமயமலை நீல கிரானைட் [7] கற்கள் குக்கனூரிலும் அதைச் சுற்றியுள்ள குவாரிகளிலும் வெட்டப்படுகிறது.

போக்குவரத்து

தொகு

கொப்பள், எலபர்கா, கதக் - பெட்டகேரி ஆகிய நகரங்களுக்கு குக்கனூர் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பெரிய விமான நிலையம் ஹூப்ளியில் உள்ளது.

பேருந்து

தொகு

அருகிலுள்ள நகரமான கொப்பள் பெங்களூர், ஹூப்ளி, ஐதராபாத்து, பாகல்கோட் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு பேருந்து சேவையை வழங்குகிறது. கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) குக்கனூரில் ஒரு பேருந்து மையத்தைக் கொண்டுள்ளது. இது மற்ற நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பேருந்துகளை இயக்குகிறது.

இரயில்

தொகு

குக்கனூருக்கு மிக அருகில் உள்ள தொடர் வண்டி நிலையம் பனப்பூர் 12 கி.மீ தூரத்திலுள்ள, கொப்பள் இரயில் நிலையம் 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kalyani Chalukyan temples". பார்க்கப்பட்ட நாள் 2008-08-18.
  2. "KOPPAL TOURISM". Archived from the original on 2008-11-20. பார்க்கப்பட்ட நாள் 2008-08-18.
  3. 3.0 3.1 Village code= 563400 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  4. "Yahoomaps India :". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Kuknoor, Koppal, Karnataka
  5. "Kamat's Potpourri: Epigraphist P. B. Desai". பார்க்கப்பட்ட நாள் 2008-08-18.
  6. "Kannada Inscriptions-Rashtrakuta Dynasty-UPENN-Kannada Influence". பார்க்கப்பட்ட நாள் 2008-08-18.
  7. "Archived copy". Archived from the original on 7 April 2012. பார்க்கப்பட்ட நாள் 16 November 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kuknur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்கனூர்&oldid=3550274" இலிருந்து மீள்விக்கப்பட்டது