கொப்பள் மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்

கொப்பள் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கொப்பளில் உள்ளது. கொப்பள் நகரம் மாநிலத் தலைநகரான பெங்களூருக்கு வடமேற்கே 351 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கொப்பள் மாவட்டம்
ಕೊಪ್ಪಳ ಜಿಲ್ಲೆ
மாவட்டம்
நாடு இந்தியா
Stateகருநாடகம்
தலைமையிடம்கொப்பள்
வட்டம் (தாலுகா)7
பரப்பளவு
 • மொத்தம்5,570 km2 (2,150 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்13,89,920
 • அடர்த்தி166/km2 (430/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
தொலைபேசி குறியீடு+ 91 (0)8539
வாகனப் பதிவுKA-37
இணையதளம்https://koppal.nic.in/en/

மாவட்ட நிர்வாகம்

தொகு

கொப்பள் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது[1]. அவைகள்:

  1. கொப்பள் வட்டம்
  2. கங்காவதி வட்டம்
  3. குஷ்தகி வட்டம்
  4. யெல்புர்கா வட்டம்
  5. குக்கனூர் வட்டம்
  6. கனககிரி வட்டம்
  7. கரத்தாகி வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கொப்பள் மாவட்டத்தின் மக்கள் தொகை 1,389,920 ஆகும். அதில் ஆண்கள் 699,926 மற்றும் பெண்கள் 689,994 உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 983 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.09% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 87.63 %, இசுலாமியர் 11.64 % , கிறித்தவர்கள் 0.29 % மற்றும் பிறர் 0.44% ஆக உள்ளனர்.[2]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tahsildar Office
  2. Koppal District - Population 2011

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொப்பள்_மாவட்டம்&oldid=4115704" இலிருந்து மீள்விக்கப்பட்டது