திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று
திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் கேரள மாநிலம் எர்ணாகுளம்(கொச்சின்) மாவட்டத்தில் திருக்காட்கரை (ஆங்கிலம்:Thrikkakara) என்கிற ஊரில் அமைந்துள்ள ஒரு வைணவக்கோயில். இது வைணவர்களுக்கு முக்கியமான வைணவத்திருத்தலங்களான 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். கடவுள் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமான வாமனமூர்த்திக்கு அமைந்துள்ள மிகச்சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கோயில் வட்டவடிவ கேரள பாணியில் அமைந்துள்ளது. கோயில் பரசுராமரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: | 10°02′07.8″N 76°19′46.1″E / 10.035500°N 76.329472°Eஆள்கூறுகள்: 10°02′07.8″N 76°19′46.1″E / 10.035500°N 76.329472°E |
பெயர் | |
பெயர்: | காட்கரையப்பன் கோயில்,வாமனமூர்த்தி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | எர்ணாகுளம் |
அமைவு: | திருக்காட்கரை |
ஏற்றம்: | 38 m (125 ft) |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காட்கரையப்பன் |
தாயார்: | வாத்ஸல்யவல்லி |
தீர்த்தம்: | கபில தீர்த்தம் |
சிறப்பு திருவிழாக்கள்: | ஓணம் |
வரலாறு | |
அமைத்தவர்: | பரசுராமர் |
தல வரலாறுதொகு
அரக்க மன்னனான மகாபலி சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி அழித்த இடம் இந்த தலம் ஆகும்.
திருவிழாக்கள்தொகு
ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் மிக முதன்மையான கோயில்