மகாபலி சக்கரவர்த்தி

மகாபலி சக்கரவர்த்தி இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஓரு அரக்க அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை வாமண புராணத்தில் அமைந்துள்ளது. மாவலி என்று இவன் பெயரைக் குறிப்பிட்டு இவன் வரலாற்றைத் தமிழ்நெறியில் கூறுகிறான்.

மகாபலிச் சக்கரவர்த்தியுடன் வாமனர்
வாமனர் மகாபலியின் தலையில் கால்வைத்து அமிழ்த்தும் காட்சியை விவரிக்கும் ஓவியம்

மகாபலி அசுர அரசர்களிலேயே மிகப்பெரிய, மிக அதிக வலிமை வாய்ந்த அரசர் ஆவார்.

மகாபலி தன்னிடம் பிச்சை கேட்டு வந்த, தேவர்களின் இனத்தைச் சேர்ந்த, வாமனர் என்ற ஓர் ஏழை பிராமணனுக்குத் தான் கொடுத்திருந்த ஒரு வாக்கிலிருந்து அவர் பின்வாங்க விரும்பாத காரணத்தால், அவர் தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தார்.

ராஜசூய யாகம்

தொகு

மகாபலியின் ஆட்சி அதன் உச்சத்தில் இருந்த போது இந்தியா நெடுகிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, அப்பேரரசர் ஒரு ராஜசூய யாகத்தை நடத்தினார். இந்தியாவின் அனைத்து பழங்குடி இனங்களையும் சாம்ராஜ்யங்களையும் அரசர்கள், குழுத்தலைவர்கள், ராசாக்கள், மகாராசாக்கள், ஆகியோர், அரசர்களுக்கெல்லாம் பேரரசரான மகாபலிக்கு சிறப்பு மரியாதை செலுத்துவதற்காக, முசிறியில் குழுமினர். சடங்கின் ஒரு பகுதியாக, தன்னிடம் யார் எதை கேட்டாலும் அவருக்கு அதை கொடுப்பதாகப் பேரரசர் மகாபலி அறிவித்தார்.

அந்த சமயத்தில்தான், அசுரத் தலைநகரத்தில் ஒரு பிராமணக் கல்வி மையத்தை நிர்மாணிப்பதற்காக தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்று கேட்டு, ஓர் ஏழை பிராமணனாக மாறுவேடம் அணிந்து வாமான விஷ்ணு அங்கு வந்தான். தான் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க விரும்பாத மகாபலி, அசுரத்தலைநகரில் தேவ பிராமணர்கள் தங்களது மதத்தை போதிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.

விரைவில் இச்சிறிய மையம் ஒரு மாபெரும் சமயப்பரப்பு நிலையமாக வளர்ந்தது. அது சூழ்ச்சிக்கும் ராஜ சதிக்குமான ஒரு செழிப்பான இடமாக விளங்கியது. இறுதியில் தங்களை எது தாக்கியிருந்தது என அசுர குல அறிவாளிகள் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, தேவ பிராமணர்கள் கடைசி அசுர சாம்ராஜியத்தை ஆட்கொண்டிருந்தினர்

மலையாள மண்ணில் மகாபலி

தொகு

மகாபலி வாமனரிடம் தான் ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு (கேரளா) மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே ஓணம் பண்டிகையாக கேரளா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கருவி நூல்

தொகு
  • அசுரன்
  • வாமன புராணம்

வெளி இணைப்புகள்

தொகு

http://temple.dinamalar.com/news_detail.php?id=11017 வாமன புராணம் பகுதி 1 http://temple.dinamalar.com/news_detail.php?id=11018 வாமன புராணம் பகுதி 2

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபலி_சக்கரவர்த்தி&oldid=3824044" இலிருந்து மீள்விக்கப்பட்டது