திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்

திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் (Government Museum, Tiruchirappalli) தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது.

அரசு அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி
இராணி மங்கம்மாள் மாளிகை உட்பகுதி
Map
நிறுவப்பட்டது1983; 41 ஆண்டுகளுக்கு முன்னர் (1983)
அமைவிடம்சொக்கநாத நாயக்கர்மாளிகை, சிங்காரதோப்பு,
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
அஞ்சல் - 620 002
ஆள்கூற்று10°49′30″N 78°41′45″E / 10.8250°N 78.6958°E / 10.8250; 78.6958
வகைபாரம்பரிய மையம்
அங்கீகாரம்இந்திய கலாசாரத்துறை
சேகரிப்புகள்கற்காலம்
சேகரிப்பு அளவு2000
இயக்குனர்முதன்மைச் செயலர் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆணையாளர்[1]
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
Historical sculpture of chola
சோழர் காலத்தில் செய்யப்பட்ட சிலை
manuscript of India
கையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி

அருங்காட்சியகத்தில் நிலவியல், விலங்கியல், ஓவியங்கள், மானுடவியல், கல்வெட்டியல் மற்றும் வரலாறு தொடர்பான காட்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பின்புலம்

தொகு

இந்த அருங்காட்சியகம் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2][3] இதற்கு முன்பு சேலம் மற்றும் மதுரை அருங்காட்சியகங்கள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டன.[4] முதலில் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில் அரசு அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு 1997 இல் இராணி மங்கம்மாள் மஹாலுக்கு மாற்றப்பட்டது.[5] அருங்காட்சியகம் பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.[6]

காட்சிப் பொருட்கள்

தொகு
 
இந்திய நாகரிகத்தின் மண்பாண்டங்கள்

அருங்காட்சியகத்தில் 2000 பொரு‌ட்க‌ள் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளாக கொண்டுள்ளது.[5] உட்புற காட்சிகளில் சில பெருங்கற்கள் சிற்பங்கள், சிற்பங்கள், கற்கால கல்வெட்டுகள், இசைக்கருவிகள் வாசித்தல், கருவிகள், நாணயங்கள் மற்றும் சோழ சகாப்த நாணயங்கள், ஓவியங்கள் போன்ற வரலாற்றுக்கால தொல்பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.[6]

புகைப்படங்கள்

தொகு

அரிய ஆவணங்கள், பனை ஓலைச் சுவடிகள், படிமங்கள், ஹைதர் அலி பயன்படுத்தப்படுத்திய ஆயுதம் மற்றும் பீரங்கிக் குண்டுகள், ஆரம்ப நாட்களில் பி.எச்.இ.எல். நிறுவனம், ஸ்ரீரங்கம் மாதிரி, மலைக்கோட்டை மாதிரி மற்றும் தபால்தலை சேகரிப்புப் பொருட்கள் ஆகிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.[4]

வெளிப்புற காட்சிகள்

தொகு

வெளிப்புறப் பூங்காவில் கற்களாலான விக்கிரகங்கள், சிற்பங்கள் ஆகியவை உள்ளன. வெளிப்புறப் பூங்கா 17 ஏப்ரல் 2012 அன்று திறக்கப்பட்டது. பலிகொடுக்கும் பலிபீடம், கல் நந்தி மற்றும் லிங்கங்கள் உட்பட 18 ஆம் நூற்றாண்டு மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சுமார் 45 இந்து மதம் தொடர்பான சிற்பங்கள் உள்ளன.[7]

சூழலியல் பிரிவு

தொகு

அருங்காட்சியகத்தில், அரிய பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றின் தொகுப்பு இடமாக சூழலியல் பிரிவு உள்ளது.

இந்து மத கடவுள்களான கிருஷ்ணா, துர்க்கை, திருமால் மற்றும் நடராஜரின் காட்சிகளைக் காண்பிக்கும் அரிய தஞ்சாவூர் ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "About the Department" (பி.டி.எவ்). தமிழ்நாடு அரசு. Department of Museums. pp. 4, 5. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
  2. "District Museums–Government Museum, Tiruchirappalli". Government Museum, Chennai. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
  3. R. Rajaram (19 December 2009). "No breakthrough in idol theft case Law & order". The Hindu (Tiruchi). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/no-breakthrough-in-idol-theft-case-law-order/article119059.ece. பார்த்த நாள்: 23 February 2014. 
  4. 4.0 4.1 Dennis, Selvan (18 April 2012). "3,000-year-old burial urn found in Trichy installed in museum". The Times of India (Madurai). http://timesofindia.indiatimes.com/city/madurai/3000-year-old-burial-urn-found-in-Trichy-installed-in-museum/articleshow/12710443.cms?referral=PM. பார்த்த நாள்: 23 February 2014. 
  5. 5.0 5.1 "Break-in at Tiruchi government museum". The Hindu (Tiruchi). 29 September 2009. http://www.thehindu.com/news/national/tamil-nadu/breakin-at-tiruchi-government-museum/article26379.ece. பார்த்த நாள்: 23 February 2014. 
  6. 6.0 6.1 Nahla, Nainar (19 July 2013). "A step back in time". The Hindu (Tiruchi). http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/a-step-back-in-time/article4931941.ece. பார்த்த நாள்: 23 February 2014. 
  7. Olympia Shilpa, Gerald (18 April 2012). "Sculpture park opened at museum". The Hindu (Tiruchi). http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/sculpture-park-opened-at-museum/article3327645.ece. பார்த்த நாள்: 23 February 2014. 

வெளி இணைப்புகள்

தொகு