பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை)
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XV; 9/15 ஜனவரி 1554 – 8 ஜூலை 1623), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 9 பெப்ரவரி 1621 முதல் 1623இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி | |
---|---|
ஆட்சி துவக்கம் | 9 பெப்ரவரி 1621 |
ஆட்சி முடிவு | 8 ஜூலை 1623 |
முன்னிருந்தவர் | ஐந்தாம் பவுல் |
பின்வந்தவர் | எட்டாம் அர்பன் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | 1 மே 1612 Cardinal Scipione Caffarelli-Borghese-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 19 செப்டம்பர் 1616 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | Alessandro Ludovisi |
பிறப்பு | 9 அல்லது 15 ஜனவரி 1554 Bologna, திருத்தந்தை நாடுகள் |
இறப்பு | 8 சூலை 1623 உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | (அகவை 69)
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
கர்தினால் அலெக்சாண்ரோ, மடல்கள் எழுதுவதில் பேருவகை கொள்வார். 1621 பிப்ரவரியில் புதிய பாப்புவாக தேர்தெடுக்கப் படும்போதே நோயுற்றவராயிருந்தார். இதனால், பாப்புக்குரிய பணியாற்றும் நிலையில் அவர் இல்லை. எனினும் புதிய பாப்புவாக தேர்தெடுப்பது பற்றிய சில ஆனைகளைப் பிறப்பித்தார். திருச்சபை அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பரவி வந்தது. இந்த நாடுகளில் திருமறைப் பரப்புபணியாற்றுவதற்காக புதிய அமைப்புகளை நிறுவினார்.
திருச்சபையின் பெரும் புனிதர்களுல் சிலரான அவிலாவின் புனித தெரேசா, பிரான்சிஸ் சவேரியார், லொயோலா இஞ்ஞாசி, பிலிப்பு நேரி ஆகியோருக்கு புனிதர் பட்டமும் அலோசியுஸ் கொன்சாகாவுக்கு அருளாளர் பட்டமும் அளித்தவர் இவர். 1623 ஜீலை 8 ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.