திருநின்றவூர் தொடருந்து நிலையம்
திருநின்றவூர் தொடருந்து நிலையம் (Thiruninravur Railway Station) என்பது சென்னை மத்திய தொடருந்து நிலையம் - அரக்கோணம் தொடருந்து நிலையம் இவற்றுக்கிடையே உள்ள பகுதியில் உள்ள சென்னை புறநகர் இருப்பு வழியிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இந்தத் தொடருந்து நிலையமானது, திருநின்றவூரின் அருகாமைப்பகுதி மக்களுக்கு சேவையாற்றுகிறது. இந்த தொடருந்து நிலையமானது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசையில் 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அமைவிடமானது கடல் மட்டத்திலிருந்து 37 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
திருநின்றவூர் | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் இருப்புவழி, தென்னக இரயில்வே | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருநின்றவூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°07′26″N 80°01′41″E / 13.123902°N 80.028054°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு இரயில்வே, சென்னை புற நகர் இருப்புப் பாதையின் வடக்கு, மேற்கு வடக்கு, மேற்கு தெற்கு இருப்புப்பாதைகள் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 6 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரைநிலை நிலையம் | ||||
தரிப்பிடம் | அமைந்துள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | TI | ||||
பயணக்கட்டண வலயம் | தெற்கு இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | 29 நவம்பர் 1979[1] | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
பயணிகள் | |||||
பயணிகள் | 20,000/நாள்[சான்று தேவை] | ||||
|
வரலாறு
தொகு1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று மின்மயமாக்கப்பட்டது. இந்தப் பணி சென்னை மத்திய தொடருந்து நிலையம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டபோது நிகழ்ந்தது. [1] இந்நிலையத்தில் பயணிகளுக்கான நடைப்பாலமானது பெப்ரவரி 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2]2019 ஆம் ஆண்டில் பயணிகள் முன்பதிவிற்கான புதிய சேவை முகப்பொன்று இந்நிலைய வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தளவமைப்பு
தொகுஇத்தொடருந்து நிலையம் மூன்று நடைமேடைகளைக் கொண்டுள்ளது. முதல் நடைமேடையானது நீண்ட தூர தொடருநு்துகள் மற்றும் சரக்குந்துகளுக்கானது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகள் புறநகர் போக்கவரத்திற்கான தொடருந்துகளுக்கானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Subway at Nemilichery railway station near Chennai to be completed by March". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Subway-at-Nemilichery-railway-station-near-Chennai-to-be-completed-by-March/articleshow/50994426.cms. பார்த்த நாள்: 20 Feb 2016.