திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்
திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்கள் (Cardinal electors for the papal conclave, 2013) என்பது 2013, பெப்ருவரி 28ஆம் நாள் திருத்தந்தைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டுக்குப் பின் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பதவியை ஏற்க ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடுகின்ற அவையில் பங்கேற்று வாக்களிப்போரைக் குறிக்கும்.
இத்தேர்தல் அவையில் பங்கேற்க, ஒவ்வொரு கர்தினாலும் பதினாறாம் பெனடிக்ட் பதவி விலகிய நாளில் (2013, பெப்ருவரி 28) 80வயதைத் தாண்டாமல் இருக்க வேண்டும்.
திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார் பெயர் அடைவு
தொகு2013இல் நிகழ்கின்ற திருத்தந்தைத் தேர்தலில் கீழ்வரும் கர்தினால்மார் பங்கேற்கின்றனர்:[1][2][3]
கீழ்வரும் பட்டியலில் பதவித் தகுதி அடிப்படையில் கர்தினால்மார்களின் பெயர்கள் தரப்படுகின்றன. கர்தினால்-ஆயர், கர்தினால்-குரு, கர்தினால்-திருத்தொண்டர் என்று தகுதி வரிசை அமையும். ஒவ்வொரு வரிசைக்குள்ளும் ஒருவர் எந்த நாளில் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்னும் அடிப்படையில் பெயர்வரிசை அமையும்.
இப்பட்டியலில் வருகின்ற கர்தினால்மார்களைத் தவிர, வேறு 90 கர்தினால்மார்கள் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளனர். அவர்கள் 80 வயதைத் தாண்டிவிட்டதால் திருத்தந்தை தேர்தல் அவை 2013இல் கலந்துகொள்ளும் உரிமை இல்லை. இவ்வாறு உரிமை இழந்தோரில் மிக இளையவர் உக்ரேன் நாட்டு கர்தினால் லூபோமிர் ஹூசார் என்பவர். அவர், பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்த நாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்தான் 80 வயதை எய்தினார்.
வரிசை எண் | கர்தினாலின் பெயர் | பிறந்த நாள் | சொந்த நாடு | தற்போதைய பணி | தகுதி வரிசை |
---|---|---|---|---|---|
1 | ஜோவான்னி பத்தீஸ்தா ரே | 30 சனவரி 1934 | இத்தாலியா | ஆயர்களுக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் | கர்தினால்-ஆயர் |
2 | தார்ச்சீசியோ பெர்த்தோனே | 2 திசம்பர் 1934 | இத்தாலியா | வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்; தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் | கர்தினால்-ஆயர் |
3 | அந்தோனியோஸ் நாகீப் | 18 மார்ச்சு 1935 | எகிப்து | கோப்தியரின் அலெக்சாந்திரியாவின் ஓய்வுபெற்ற மறைமுதல்வர் | கர்தினால்-ஆயர்; மறைமுதல்வர் |
4 | பேகரா பூட்ரோஸ் ராய் | 25 பெப்ரவரி 1940 | லெபனான் | மரோனித்தியரின் அந்தியோக்கியாவின் மறைமுதல்வர் | கர்தினால்-ஆயர்; மறைமுதல்வர் |
5 | காட்ஃப்ரீட் டன்னீல்ஸ் | 5 சூன் 1933 | பெல்ஜியம் | மெகலன்-புரூச்செல்சின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
6 | யோவாக்கிம் மைஸ்னர் | 25 திசம்பர் 1933 | செருமனி | கொலோன் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
7 | நிக்கோலாஸ் தே ஹெசூஸ் லோப்பஸ் ரொட்ரீகெஸ் | 31 அக்டோபர் 1936 | டொமினிக்கன் குடியரசு | சாந்தோ தொமிங்கோ உயர்மறைமாவட்டத்தின் பேராயர் | கர்தினால்-குரு |
8 | ராஜர் மஹோனி | 27 பெப்ரவரி 1936 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | லாஸ் ஆஞ்செலஸ் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
9 | ஹேமெ லூக்காஸ் ஓர்த்தேகா இ அலமீனோ | 18 அக்டோபர் 1936 | கியூபா | ஹவானா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
10 | ஷான்-க்ளோட் துர்க்கோட் | 26 சூன் 1936 | கனடா | மொன்ரியல் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
11 | விங்கோ பூல்ச்சிக் | 8 செப்டம்பர் 1945 | பொசுனியா எர்செகோவினா | ப்ருகுபோஸ்னா (சாரயேவோ) உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
12 | சாந்தோவால் இனீகெஸ் | 28 மார்ச்சு 1933 | மெக்சிகோ | குவாடலஹாரா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
13 | அந்தோனியோ மரியா ரொவூக்கோ வரேலா | 24 ஆகத்து 1936 | எசுப்பானியா | மத்ரீத் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
14 | தியோனீஜி தெத்தாமான்சி | 14 மார்ச்சு 1934 | இத்தாலியா | மிலான் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
15 | போலிக்கார்ப் பெங்கோ | 5 ஆகத்து 1944 | தான்சானியா | டாரசலாம் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
16 | கிறிஸ்தோஃப் ஷோன்போர்ன் | 22 சனவரி 1945 | ஆஸ்திரியா | வியென்னா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
17 | நொர்பேர்த்தோ ரிவேரா கர்ரேரா | 6 சூன் 1942 | மெக்சிகோ | மெக்சிகோ நகர் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
18 | பிரான்சிஸ் ஜோர்ஜ் | 16 சனவரி 1937 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | சிக்காகோ உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
19 | சேனோன் குரோக்கோலோவ்ஸ்க்கி | 11 அக்டோபர் 1939 | போலந்து | கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் தலைவர் | கர்தினால்-குரு |
20 | கிரெஷேன்சியோ சேப்பே | 2 சூன் 1943 | இத்தாலியா | நேப்பிள்ஸ் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு] |
21 | வால்ட்டர் காஸ்பர் | 5 மார்ச்சு 1933 | செருமனி | கிறித்தவ ஒன்றிப்புக்கான திருத்தந்தைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தலைவர் | கர்தினால்-குரு |
22 | ஐவன் டீயாஸ் | 14 ஏப்ரல் 1936 | இந்தியா | மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் | கர்தினால்-குரு |
23 | ஜெரால்டோ மகேல்லா அக்னேலோ | 19 அக்டோபர் 1933 | பிரேசில் | சான் சால்வடோர் தா பாகியா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
24 | அவுட்ரிஸ் பாச்க்கிஸ் | 1 பெப்ரவரி 1937 | லித்துவேனியா | வில்னியுஸ் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
25 | பிரான்சிஸ்கோ ஹவியேர் எர்ராசூரிஸ் ஓஸ்ஸா | 5 செப்டம்பர் 1933 | சிலி | சாந்தியாகோ தே சிலி உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
26 | ஹூலியோ தெர்ராசாஸ் சாண்டோவால் | 7 மார்ச்சு 1936 | பொலீவியா | சாந்தா குரூஸ் தே லா சியேரா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
27 | வில்ஃப்ரிட் நேப்பியர் | 8 மார்ச்சு 1941 | தென்னாப்பிரிக்கா | டர்பன் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
28 | ஓஸ்கார் ஆண்ட்ரேஸ் ரோட்ரிகஸ் மராடியாகா | 29 திசம்பர் 1942 | ஹொண்டுராஸ் | தெகுசிகல்ப்பா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
29 | ஹுவான் லூயிஸ் சிப்ரியானி தோர்னே | 28 திசம்பர் 1943 | பெரு | லீமா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
30 | க்ளாவுதியோ ஹூம்மெஸ் | 8 ஆகத்து 1934 | பிரேசில் | குருக்களுக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் | கர்தினால்-குரு |
31 | ஹோர்கே பெர்கோலியோ (புதிய திருத்தந்தை) | 17 திசம்பர் 1936 | அர்ஜென்டீனா | போனஸ் அயிரெஸ் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
32 | ஹோசே போலிகார்ப்போ | 26 பெப்ரவரி 1936 | போர்த்துகல் | லிஸ்பன் மறைமுதல்வர் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
33 | செவெரீனோ பொலேத்தோ | 18 மார்ச்சு 1933 | இத்தாலியா | டூரின் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
34 | கார்ல் லேமான் | 16 மே 1936 | செருமனி | மைன்ஸ் மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
35 | ஆஞ்செலோ ஸ்கோலா | 7 நவம்பர் 1941 | இத்தாலியா | மிலான் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
36 | ஆன்டனி ஒலுபுன்மி ஒக்கோஜியே | 16 சூன் 1936 | நைஜீரியா | லேகோஸ் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
37 | கபிரியேல் சூபேய்ர் வாக்கோ | 27 பெப்ரவரி 1941 | சூடான் | கார்ட்டூம் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
38 | கார்லோஸ் அமீகோ வால்லேஹோ | 23 ஆகத்து 1934 | எசுப்பானியா | செவில் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
39 | ஜஸ்டின் பிரான்சிஸ் ரிகாலி | 19 ஏப்ரல் 1935 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | பிலடெல்பியா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு |
40 | என்னியோ அந்தோனேல்லி | 18 நவம்பர் 1936 | இத்தாலியா | குடும்பங்களுக்கான திருத்தந்தைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தலைவர் | கர்தினால்-குரு |
41 | பீட்டர் டர்க்சன் | 11 அக்டோபர் 1948 | கானா | நீதி மற்றும் அமைதி வளர்ப்பதற்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் | கர்தினால்-குரு |
42 | தெலெஸ்போர் பிளாசிடஸ் தோப்போ | 15 அக்டோபர் 1939 | இந்தியா | ராஞ்சி உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
43 | ஜோர்ஜ் பெல் | 8 ஏப்ரல் 1941 | ஆஸ்திரேலியா | சிட்னி உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
44 | யோசிப் போசானிச் | 20 மார்ச்சு 1949 | குரோவாசியா | சாக்ரப் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
45 | பாம் மின் மான் | 5 மார்ச்சு 1934 | வியட்நாம் | ஹோ சி மின் நகர் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
46 | பிலிப் பார்பரின் | 17 அக்டோபர் 1950 | பிரான்சு | லியோன் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
47 | பீட்டர் ஏர்டோ | 25 சூன் 1952 | அங்கேரி | எஸ்டெர்கம்-புடாபெஸ்ட் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
48 | மார்க் ஊலே | 8 சூன் 1944 | கனடா | ஆயர்களுக்கான பேராயத்தின் தலைவர் | கர்தினால்-குரு |
49 | அகொஸ்தீனோ வல்லீனி | 17 ஏப்ரல் 1940 | இத்தாலியா | உரோமை மறைமாவட்டத்தின் கர்தினால்-முதன்மைக் குரு | கர்தினால்-குரு |
50 | ஹோர்கே உரோசா | 28 ஆகத்து 1942 | வெனெசுவேலா | கராக்காஸ் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
51 | ழான்-பியேர் ரிக்கார்ட் | 25 செப்டம்பர் 1944 | பிரான்சு | போர்டோ உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
52 | அந்தோனியோ கஞிசாரெஸ் யோவேரா | 10 அக்டோபர் 1945 | எசுப்பானியா | திருவழிபாடு மற்றும் திருவருட்சாதனங்கள் ஒழுங்குமுறைக்கான பேராயத்தின் தலைவர் | கர்தினால்-குரு |
53 | ஷான் பேட்ரிக் ஓமாலி | 29 சூன் 1944 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | பாஸ்டன் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
54 | ஸ்தனிஸ்லாவ் ஜீவிட்ச் | 27 ஏப்ரல் 1939 | போலந்து | கிராக்கோவ் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
55 | கார்லோ கஃப்ஃபாரா | 1 சூன் 1938 | இத்தாலியா | பொலோஞ்ஞா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
56 | ஷான் ப்ரேடி | 16 ஆகத்து 1939 | அயர்லாந்து | ஆர்மாக் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
57 | லூயிஸ் மார்த்தீனெஸ் சிஸ்தாச் | 29 ஏப்ரல் 1937 | எசுப்பானியா | பார்செலோனா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
58 | ஆந்த்ரே வேங்-த்ருவா | 7 நவம்பர் 1942 | பிரான்சு | பாரிசு உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
59 | ஆஞ்செலோ பாஞ்ஞாஸ்கோ | 14 பெப்ரவரி 1943 | இத்தாலியா | ஜேனொவா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
60 | தெயோதோர்-ஆத்ரியன் சார் | 28 நவம்பர் 1936 | செனகல் | டாக்கார் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
61 | ஆஸ்வால்டு கிராசியாஸ் | 24 திசம்பர் 1944 | இந்தியா | பம்பாய் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
62 | பிரான்சிஸ்கோ ரோப்ளேஸ் ஓர்த்தேகா | 2 மார்ச்சு 1949 | மெக்சிகோ | குவாடலஹாரா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
63 | டேனியல் டிநார்டோ | 23 மே 1949 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | கால்வெஸ்டன்-ஹூஸ்டன் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
64 | ஒடீலோ ஷேரெர் | 21 செப்டம்பர் 1949 | பிரேசில் | சான் பவுலோ உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
65 | ஜான் இஞ்சூவே | 1944 | கென்யா | நைரோபு உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
66 | ராவுல் வேலா சிரிபோகா | 1 சனவரி 1934 | எக்குவாடோர் | கீட்டோ உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
67 | மொன்சேங்வோ பசீன்யா | 7 அக்டோபர் 1939 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | கின்ஷாசா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
68 | பவுலோ ரோமெயோ | 20 பெப்ரவரி 1938 | இத்தாலியா | பலேர்மோ உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
69 | டானல்ட் உவேர்ல் | 12 நவம்பர் 1940 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | வாஷிங்டன் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
70 | ரெய்மூண்டோ தாமசேனோ அசீஸ் | 15 பெப்ரவரி 1937 | பிரேசில் | அப்பரசீதா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
71 | கசிமீரெஸ் நீச் | 1 பெப்ரவரி 1950 | போலந்து | வார்சா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
72 | மால்கம் ரஞ்சித் | 15 நவம்பர் 1947 | சிறீலங்கா | கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
73 | ரைன்ஹார்ட் மார்க்ஸ் | 21 செப்டம்பர் 1953 | செருமனி | மூனிச் மற்றும் ஃப்ரீசிங் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
74 | ஜோர்ஜ் ஆலஞ்சேரி | 19 ஏப்ரல் 1945 | இந்தியா | எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பேராயர் | கர்தினால்-குரு |
75 | தாமஸ் க்றிஸ்டோபர் காலின்ஸ் | 16 சனவரி 1947 | கனடா | டொராண்டோ உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
76 | டோமினிக் டூக்கா | 26 ஏப்ரல் 1943 | செக் குடியரசு | பிராக் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
77 | விம் ஐக் | 22 சூன் 1953 | நெதர்லாந்து | உட்ரெக்ட் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
78 | ஜுசேப்பே பேத்தொரி | 25 பெப்ரவரி 1947 | இத்தாலியா | புளோரன்சு உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
79 | திமத்தி எம். டோலன் | 6 பெப்ரவரி 1950 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | நியூயார்க் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
80 | ரைனர் வேல்க்கி | 18 ஆகத்து 1956 | செருமனி | பெர்லின் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
81 | ஜான் டாங் ஹோன் | 31 சூலை 1939 | சீனா | ஹாங்காங் உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
82 | பசேலியோஸ் கிளேமிஸ் | 15 சூன் 1959 | இந்தியா | திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட சீரோ-மலபார் சபையின் தலைமைப் பேராயர் | கர்தினால்-குரு |
83 | ஜான் ஒனாயக்கன் | 29 சனவரி 1944 | நைஜீரியா | அபூஜா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
84 | ரூபன் சலாசார் கோமெஸ் | 22 செப்டம்பர் 1942 | கொலம்பியா | போகொட்டா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
85 | லூயிஸ் அந்தோனியோ தாக்லே | 21 சூன் 1957 | பிலிப்பீன்சு | மணிலா உயர்மறைமாவட்டப் பேராயர் | கர்தினால்-குரு |
86 | ஷான்-லூயி தோரான் | 3 ஏப்ரல் 1943 | பிரான்சு | பல்சமய உரையாடலுக்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர்/முதன்மைத் திருத்தொண்டர் |
87 | அட்டீலியோ நிக்கோரா | 16 மார்ச்சு 1937 | இத்தாலியா | நிதி தொடர்பான செய்தித் துறைத் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
88 | வில்லியம் லெவேடா | 15 சூன் 1936 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | விசுவாசக் கொள்கைக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
89 | ஃப்ராங்க் ரோடே | 23 செப்டம்பர் 1934 | சுலொவீனியா | அர்ப்பண வாழ்வு மற்றும் திருத்தூது வாழ்வுக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
90 | லெயோனார்டோ சாண்ட்ரி | 18 நவம்பர் 1943 | அர்ஜென்டீனா | கீழைத் திருச்சபைகளுக்கான பேராயத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
91 | ஜோவான்னி லாயோலோ | 3 சனவரி 1935 | இத்தாலியா | வத்திக்கான் நகர்-நாட்டுக்கான திருத்தந்தைக் குழுவின் ஓய்வுபெற்ற தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
92 | பவுல் யோசப் கோர்டேஸ் | 5 செப்டம்பர் 1934 | செருமனி | கோர் ஊனும் (ஒரே இதயம்) திருத்தந்தைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
93 | ஆஞ்செலோ கோமாஸ்த்ரி | 17 செப்டம்பர் 1943 | இத்தாலியா | புனித பேதுரு பெருங்கோவிலின் முதன்மைக்குரு; வத்திக்கான் நகர்-நாட்டின் பதில்-ஆளுநர் | கர்தினால்-திருத்தொண்டர் |
94 | ஸ்தனிஸ்லாவ் ரீய்க்கோ | 4 சூலை 1945 | போலந்து | பொதுநிலையினருக்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
95 | ரஃபாயேலே ஃபரீனா | 24 செப்டம்பர் 1933 | இத்தாலியா | தூய உரோமைத் திருச்சபையின் ஓய்வுபெற்ற இரகசிய ஆவணக்காப்பாளர் மற்றும் நூலகர் | கர்தினால்-திருத்தொண்டர் |
96 | ஆஞ்செலோ அமாத்தோ | 8 சூன் 1938 | இத்தாலியா | புனிதர் நிலை ஆய்வுக்கான பேராயத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
97 | ராபர்ட் சேரா | 15 சூன் 1945 | கினியா | கோர் ஊனும் (ஒரே இதயம்) திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
98 | பிரான்செஸ்கோ மோந்தேரீசி | 28 மே 1934 | இத்தாலியா | சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோவிலின் ஓய்வுபெற்ற முதன்மைக் குரு | கர்தினால்-திருத்தொண்டர் |
99 | ரேய்மண்ட் லியோ பர்க் | 30 சூன் 1948 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | திருத்தூது உயர்நீதிமன்றத் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
100 | கூர்ட் கோக் | 15 மார்ச்சு 1950 | சுவிட்சர்லாந்து | கிறித்தவ ஒன்றிப்பை வளர்ப்பதற்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
101 | பவுலோ சார்டி | 1 செப்டம்பர் 1934 | இத்தாலியா | மால்ட்டா உயர் இராணுவக் குழுவுக்குப் பாதுகாவலர் | கர்தினால்-திருத்தொண்டர் |
102 | மவுரோ பியாச்சேன்சா | 15 செப்டம்பர் 1944 | இத்தாலியா | குருக்களுக்கான பேராயத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
103 | வெலாசியோ தே பவுலிஸ் | 19 செப்டம்பர் 1935 | இத்தாலியா | கிறித்துவின் போர்வீரர் என்னும் சபை ஆளுகைக்கான திருத்தந்தைத் தூதுவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
104 | ஜான்ஃப்ராங்கோ ராவாசி | 18 அக்டோபர் 1942 | இத்தாலியா | பண்பாடு தொடர்பான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
105 | பெர்னாண்டோ ஃபிலோனி | 15 ஏப்ரல் 1946 | இத்தாலியா | மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
106 | மனுவேல் மோந்தேய்ரோ தே காஸ்த்ரோ | 29 மார்ச்சு 1938 | போர்த்துகல் | திருச்சபை உச்ச நீதிமன்றத் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
107 | சாந்தோஸ் இ காஸ்தேல்லோ | 21 செப்டம்பர் 1935 | எசுப்பானியா | புனித மரியா பெருங்கோவிலின் முதன்மைக் குரு | கர்தினால்-திருத்தொண்டர் |
108 | அந்தோனியோ மரியா வேலியோ | 3 பெப்ரவரி 1938 | இத்தாலியா | இடம்பெயர்வோர் மற்றும் நாடோடிகள் அருட்பணிக்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
109 | ஜூசேப்பே பெர்த்தேல்லோ | 1 அக்டோபர் 1942 | இத்தாலியா | வத்திக்கான் நகர்-நாட்டுக்கான திருத்தந்தைக் குழுத் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
110 | பிரான்சேஸ்கோ கோக்கோபால்மேரியோ | 6 மார்ச்சு 1938 | இத்தாலியா | சட்டம் தொடர்பான விளக்கங்களுக்கான திருத்தந்தைக் கழகத் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
111 | யோவான் ப்ராஸ் தே ஆவிஸ் | 24 ஏப்ரல் 1947 | பிரேசில் | அர்ப்பண வாழ்வு மற்றும் திருத்தூது வாழ்வுக்கான பேராயத்தின் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
112 | எட்வின் பிரெடெரிக் ஓப்ரையன் | 8 ஏப்ரல் 1939 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | எருசலேம் திருக்கல்லறை அணியின் பெருந்தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
113 | தோமேனிக்கோ கால்காஞ்ஞோ | 3 பெப்ரவரி 1943 | இத்தாலியா | திருப்பீடத்தின் சொத்துப் பராமரிப்புக் கழகத் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
114 | ஜூசேப்பே வெர்சால்டி | 30 சூலை 1943 | இத்தாலியா | திருப்பீடத்தின் பொருளாதாரத் துறைக் கழகத் தலைவர் | கர்தினால்-திருத்தொண்டர் |
115 | ஜேம்ஸ் மைக்கிள் ஹார்வி | 20 அக்டோபர் 1949 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோலின் தலைமைக் குரு | கர்தினால்-திருத்தொண்டர் |
தேர்தலில் பங்கேற்காத, வாக்குரிமை கொண்ட கர்தினால்மார்
தொகுகீழ்வரும் கர்தினால்மார் திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ள உரிமைத் தகுதி கொண்டிருந்தாலும் பல்வேறு காரணங்களை முன்னிட்டுத் தேர்தலில் கலந்துகொள்ள முன்வரவில்லை.
வரிசை எண்[2] | கர்தினாலின் பெயர்[1] | பிறந்த நாள்[3] | சொந்த நாடு | பணி[1] | தகுதி[1] | தேர்தலில் பங்கேற்காததற்குத் தரப்பட்ட காரணம் |
---|---|---|---|---|---|---|
1 | ஜூலியஸ் தர்மாத்மாத்ஜா | 20 திசம்பர் 1934 | இந்தோனேசியா | ஜக்கார்த்தா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு | உடல்நலக் குறைவு[4] |
2 | கீத் ஓப்ரையன் | 17 மார்ச்சு 1938 | ஐக்கிய இராச்சியம் | புனித அந்திரேயா மற்றும் எடின்பரோ உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் | கர்தினால்-குரு | கவனத்தைத் திருப்ப விரும்பாததால்[5][6] |
நாடுகள் வாரியாக திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார்
தொகுநாடு | தேர்தலில் பங்கேற்போர் |
---|---|
இத்தாலியா | 28 |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | 11 |
செருமனி | 6 |
எசுப்பானியா, இந்தியா, பிரேசில் | ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 5 பேர் (மொத்தம் 15 பேர்) |
பிரான்சு, போலந்து | ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 4 பேர் (மொத்தம் 8 பேர்) |
மெக்சிகோ, கனடா | ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 3 பேர் (மொத்தம் 6 பேர்) |
போர்த்துகல், நைஜீரியா, அர்ஜென்டீனா | ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 2 பேர் (மொத்தம் 6 பேர்) |
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பொலீவியா, போஸ்னியா மற்றும் எர்செகொவீனா, சிலி, சீனா, காங்கோ, கொலொம்பியா, குரோவேசியா, கியூபா, செக் குடியரசு, டொமினிக்கன் குடியரசு, எக்குவாடோர், எகிப்து, கானா, கினியா, ஹொண்டூராஸ், அங்கேரி, அயர்லாந்து, கென்யா, லெபனான், லித்துவேனியா, நெதர்லாந்து, பெரு, பிலிப்பீன்சு, செனகல், சுலோவேனியா, தென்னாப்பிரிக்கா, சிறீலங்கா, சூடான், சுவிட்சர்லாந்து, தான்சானியா, வெனேசுவேலா, வியெட்நாம் |
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 1 கர்தினால் (மொத்தம் 35 பேர்) |
மொத்தம் கர்தினால்மார் | 115 |
- மேலும் தகவல்களுக்கு: திருப்பீடத் தேர்தல் அவை 2013, திருத்தந்தையின் பணி துறப்பு, மற்றும் பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 edu/~mirandas/electors-a-z.htm "Cardinal electors – Conclave of March 2013 – Arranged in alphabetical order". Salvador Miranda. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ 2.0 2.1 edu/~mirandas/electors-precedence.htm "Cardinal electors arranged by orders and precedence". Salvador Miranda. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ 3.0 3.1 edu/~mirandas/electors-age.htm "Cardinal electors arranged by age". Salvador Miranda. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Conclave, Cardinal Darmaatmadja renounces for "health reasons"". Asia News. பார்க்கப்பட்ட நாள் 21 February 2013.
- ↑ "Cardinal Keith O'Brien resigns, will not go to conclave". Catholic News Agency. Archived from the original on 2013-09-26. பார்க்கப்பட்ட நாள் 2013-02-25.
- ↑ "Cardinal Keith O'Brien resigns over allegations of 'inappropriate' behaviour". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 25 February 2013.