திருமண வன்கலவி

திருமண வன்கலவி (Marital rape) அல்லது துணையால் வன்கலவி மற்றும் மணவாழ்வு வன்கலவி ஒப்புமை இல்லா பாலுறவு (அதாவது, வன்கலவி) ஆகும்; இதில் குற்றமிழைப்பவர் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கைத்துணை ஆவார். இது குடும்ப வன்முறையின் கூட்டாளி வன்கலவி மற்றும் தவறான பாலுறவு ஆகும்.

ஒருகாலத்தில் பரவலாக சமூகத்தாலும் சட்டத்தாலும் மன்னிக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட திருமண வன்கலவி தற்போது உலகின் பல சமூகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பன்னாட்டு மாநாடுகள் இச்செய்கையை கண்டித்தும் குற்றப்படுத்தியும் வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருமணத்தினுள்ளும் குடும்பத்தினுள்ளும் பாலுறவு, வீட்டுக்குள்ளான வன்முறை குறித்தும் பொதுவாக பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தும் பன்னாட்டு கவனம் திரும்பியுள்ளது. இருப்பினும் இன்னும் பல நாடுகளில் திருமண வன்முறை சட்டத்திற்கு உட்படாமலோ சட்டப்புறம்பாக இருந்தும் சகித்துக் கொள்ளப்படுவதாகவோ உள்ளது; இதற்கு எதிரான சட்டங்கள் மிக அரிதாகவே செயற்படுத்தப்படுகின்றன.

திருமண வன்முறையை குற்றமாக்கவோ தண்டிக்கவோ உள்ள தயக்கம் மரபார்ந்த திருமண நோக்கினால் எழுகின்றது; ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்ணிற்கு பாலுறவில் விருப்பமில்லை (அல்லது குறைந்த விருப்பமே உள்ளது), கணவனுக்கு மனைவியுடன் உடலுறவு கொள்ள அதிகாரமுள்ளது, மனைவி கணவனுக்கு பாலுறவின் அனைத்துக் கூறுகளிலும் அடங்கியவளாக இருத்தல் வேண்டும் என்னும் கருத்தியல் வளர்க்கப்பட்டுள்ளது. இந்த கருத்தாக்கம் உலகின் பல பகுதிகளிலும் பரவலாக உள்ளது. திருமணம் மற்றும் மாந்த பாலுணர்வியல் குறித்த இக்கருத்துக்கள் 1960களிலும் 70 களிலும் பல மேற்கத்திய நாடுகளில் கேள்விக்குட்படுத்தப்பட்டன. குறிப்பாக பெண்ணியத்தின் இரண்டாம் அலை பெண் தன்னுடம்பைக் குறித்த அனைத்திலும் தன்னாட்சி உரிமை (அதாவது கட்டுப்பாடு) பெறுவதையும் திருமண வன்கலவிக்கு விலக்களிப்பதை நீக்கவும் முன்னிறுத்தியது. கிழக்கு ஐரோப்பா, எசுக்காண்டினாவியாவின் பல நாடுகள் 1970க்கு முன்னர் திருமண வன்கலவியை குற்றமாக்கின; பின்தங்கிய மற்ற மேற்கத்திய நாடுகள் 1980களிலும் 90களிலும் செயற்படுத்தின. பெரும்பாலான வளர்ந்துவரும் நாடுகள் 1990களிலும் 2000களிலும் குற்றமாக சட்டமாக்கின. சில நாடுகளில் பொது வன்கலவி சட்டத்தின் கீழும் சில நாடுகளில் தாக்குதல் சட்டத்தின் கீழும் இது குற்றமாக்கப்பட்டுள்ளது.

  திருமண வன்கலவி குற்றமாக்கப்பட்டவிடங்கள்
  இணையர் சட்டப்படிப் பிரிந்திருந்தாலே திருமண வன்கலவி குற்றம்
  திருமண வன்கலவி குடும்ப வன்முறையின் குற்றமல்லா வடிவம்
  திருமண வன்கலவி குற்றமாக ஏற்காத இடங்களாக கருதப்படுபவை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமண_வன்கலவி&oldid=3216499" இலிருந்து மீள்விக்கப்பட்டது