திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம்

(திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம் என்பது இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கீழுள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். இதனுடைய தலைமையகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.

திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம்
கண்ணோட்டம்
தலைமையகம்திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
வட்டாரம்கேரளா,தமிழ்நாடு
செயல்பாட்டின் தேதிகள்2 அக்டோபர் 1979; 45 ஆண்டுகள் முன்னர் (1979-10-02)–தற்போது வரை
முந்தியவைதென் இந்திய ரயில்வே கம்பெனி
Other
இணையதளம்www.sr.indianrailways.gov.in

வரலாறு

தொகு

திருவனந்தபுரம் இரயில்வே கோட்டமானது, ஒலவக்காடு கோட்டத்திலிருந்து ஷொறணூர், கொச்சின் துறைமுகம் பிரிவு மற்றும் மதுரை கோட்டத்திலிருந்து எர்ணாகுளம்-திருவனந்தபுரம்-கன்னியாகுமரி பிரிவு ஆகியவை பிரிக்கப்பட்டு 1979-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் உருவாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் காயங்குளம்-கொல்லம் வழித்தடமானது 1996-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தடம் 2000-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வழித்தடமானது 2006-ம் ஆண்டு மின்மயமாக்கப்பட்டது.[1]

தொடருந்து நிலையங்களின் போக்குவரத்து மற்றும் பயணிகள் வருவாய் விவரங்கள்

தொகு
தரவரிசை தொடருந்து நிலையம் மாவட்டம் பகுதிகள் மொத்த பயணிகள்
(2018–19)
பயணச்சீட்டு வருவாய்
(2018–19)
1 திருவனந்தபுரம் திருவனந்தபுரம் கேரளம் 1,42,92,407 ₹1,93,14,10,719
2 எர்ணாகுளம் சந்திப்பு எர்ணாகுளம் கேரளம் 93,39,152 ₹1,53,68,38,174
3 திருச்சூர் சந்திப்பு திருச்சூர் கேரளம் 67,81,646 ₹1,08,50,11,153
4 எர்ணாகுளம் நகரம் எர்ணாகுளம் கேரளம் 43,47,498 ₹66,70,06,491
5 கொல்லம் சந்திப்பு கொல்லம் கேரளம் 84,99,151 ₹67,45,38,284
6 ஆலுவா எர்ணாகுளம் கேரளம் 42,20,114 ₹63,55,44,911
7 கோட்டயம் கோட்டயம் கேரளம் 44,96,3200 ₹57,22,27,243
8 நாகர்கோவில் சந்திப்பு கன்னியாகுமரி தமிழ்நாடு 26,92,661 ₹50,68,49,949
9 வர்க்கலா திருவனந்தபுரம் கேரளம் 25,58,898 ₹46,51,06,837
10 கன்னியாகுமரி கன்னியாகுமரி தமிழ்நாடு 31,24,766 ₹35,49,84,400[2][3]

மேற்கோள்கள்

தொகு