திருவாதிரைக்களி

திருவாதிரைக்களி (மலையாளத்தில் திருவாதிரக்களி) அல்லது கைகொட்டிக்களி என்பது கேரளப் பெண்களால் ஆடப்படும் ஒரு வகை நடனம். திருவாதிரைத் திருநாளின் இரவில் ஆடப்பட்டு வந்ததால் இது திருவாதிரைக்களி எனப்பெயர் பெற்றது. எனினும் தற்காலங்களில் சமயச்சடங்காக அன்றியும் இந்நடனம் ஆடப்படுகிறது.

களிநடமிடும் பெண்டிர்

பெண்கள் சிறுகுழுவினராய்ச் சேர்ந்து நிலவிளக்கைச் சுற்றிக் கை கொட்டிப் பாடுவர். நடனத்தின் நாயகி பாட்டை எடுத்துத் தொடுக்க மற்றவர்கள் முடிப்பர். பாடல் பெரும்பாலும் பார்வதி சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததைப் பற்றி இருக்கும். நளன்வரலாறு, தட்சன் யாகம், இராவணன் வருகை, துரியோதன வதம் குறித்த பாடல்களும் இடம் பெறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாதிரைக்களி&oldid=2094234" இருந்து மீள்விக்கப்பட்டது