திருவிதாங்கூர் இல்லம்

புதுதில்லியில் உள்ள கட்டடம்


திருவிதாங்கூர் இல்லம் (Travancore House) இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள திருவிதாங்கூர் மகாராசாவின் முன்னாள் இல்லமாகும். திருவிதாங்கூர் அரண்மனை என்றும் இது அழைக்கப்படுகிறது. கத்தூரிபா காந்தி சாலையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.[1]

திருவிதாங்கூர் இல்லம்
Travancore House
Map
பொதுவான தகவல்கள்
கட்டுமான ஆரம்பம்1903 (1903)
நிறைவுற்றது1911; 113 ஆண்டுகளுக்கு முன்னர் (1911)
செலவு2.5 கோடி
உரிமையாளர்கேரள அரசு
மேலாண்மைஇந்திய அரசின் கேரள ஆணையரின் இருப்பிடம்
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு1,000 m2 (11,000 sq ft)
உயர்த்திகள்5
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை66
வலைதளம்
www.gokdelhi.kerala.gov.in

வரலாறு.

தொகு

திருவிதாங்கூர் இல்லம் 1930 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கட்டிடக்கலை அமைப்பு ஓர் எளிய பட்டாம்பூச்சி பங்களா ஆகும். புது தில்லியில் உள்ள பெரிய இளவரச இல்லங்களுக்கு இவ்வில்லம் அசாதாரணமானது ஆகும்.[2]

இந்த கட்டிடம் புது தில்லி நகராட்சி மன்றத்தால் பாரம்பரிய கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய கட்டிடத்தை கலாச்சார வளாகமாக மாற்றுவதே கேரள அரசின் முயற்சியாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருவிதாங்கூர் மாளிகையில் ஒரு கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது கேரளா இல்லத்தின் ஆதரவின் கீழ் நடத்தப்படுகிறது. அங்கு பல அலுவலகங்கள் உள்ளன.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Why two branches of Kerala's royal family are eyeing Travancore House in Delhi". 12 November 2022.
  2. Pinakpani (2019-09-24), English: Travancore House, a heritage building at K.G. Marg in New Delhi, பார்க்கப்பட்ட நாள் 2021-10-24
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-12-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிதாங்கூர்_இல்லம்&oldid=4138865" இலிருந்து மீள்விக்கப்பட்டது