திருவெண்ணெய்நல்லூர்

(திருவெண்ணெய் நல்லூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


திருவெண்ணெய்நல்லூர் (ஆங்கிலம்:Thiruvennainallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். திருவெண்ணெய்நல்லூர் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர்
அமைவிடம்: திருவெண்ணெய்நல்லூர்,
ஆள்கூறு 11°18′46″N 78°07′58″E / 11.31282°N 78.132784°E / 11.31282; 78.132784
நாடு  இந்தியா
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் திருவெண்ணெய்நல்லூர்
மக்களவைத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,623 (2011)

1,485/km2 (3,846/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.48 சதுர கிலோமீட்டர்கள் (2.50 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/t-v-nallur

இப்பேரூராட்சிப் பகுதியில் கிருபாபுரீஸ்வரர் கோயில் மற்றும் மெய்கண்டதேவர் கோயில் அமையப்பெற்றுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் நகரம் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

தொகு

விழுப்புரத்திலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு 6 கிமீ தொலைவில் திருவெண்ணெய்நல்லூர் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது.[1] இதன் கிழக்கில் பண்ருட்டி 22 கிமீ; மேற்கில் திருக்கோயிலூர் 23 கிமீ; வடக்கில் விழுப்புரம் 22 கிமீ; தெற்கில் உளுந்தூர்பேட்டை 23 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

6.48 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,121 வீடுகளும், 9,623 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 887 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,623 மற்றும் 46 ஆகவுள்ளனர்.[3]

ஆதாரங்கள்

தொகு
  1. https://indiarailinfo.com/arrivals/tiruvennainallur-tvnl/4853
  2. "திருவெண்ணைய்நல்லூர் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-27.
  3. Thiruvennainallur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவெண்ணெய்நல்லூர்&oldid=4126892" இலிருந்து மீள்விக்கப்பட்டது