திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

பாசுபதேசுவரர் கோயில் என்பது திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 2வது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில்
திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில்
திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில்
பாசுபதேசுவரர் கோயில், திருவேட்களம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:11°23′29″N 79°43′10″E / 11.3913°N 79.7194°E / 11.3913; 79.7194
பெயர்
புராண பெயர்(கள்):திருவேட்களம், மூங்கில்வனம்
பெயர்:திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவேட்களம்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாசுபதேசுவரர் பாசுபதநாதர்
தாயார்:நல்லநாயகி, சற்குணாம்பாள்
தல விருட்சம்:மூங்கில்
தீர்த்தம்:நள தீர்த்தம், கிருபா தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்தரி, பங்குனி உத்திரம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

அமைவிடம்

தொகு

இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது சிவத்தலமாகும்.

இறைவன்,இறைவி

தொகு

இத்தலத்தின் மூலவர் பாசுபதேஸ்வரர், தாயார் நல்லநாயகி (சமஸ்கிருதம்:சத்குணாம்பாள்). இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் மரமும், தீர்த்தமாக கிருபா தீர்த்தமும் அமைந்துள்ளது.

சிறப்புகள்

தொகு

சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது. அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்)[1]. நடராசர் முருகனாகவும் முருகன் நடராசராகவும் தோன்றிய தலமாகக் கூறுவார்கள்[2].

இவற்றையும் பார்க்க

தொகு

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. தேவாரம் தளம்
  2. தினமலர் குறிப்பு

வெளி இணைப்புகள்

தொகு