திருவையாறு ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
திருவையாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவையாறு ஊராட்சி ஒன்றியம் நாற்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவையாறில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 98,089 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 27,201 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 19 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுதிருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அம்பதுமேல்நகரம்
- அம்மையகரம்
- அள்ளூர்
- ஆவிக்கரை
- உப்புகாச்சிபேட்டை
- கடம்பங்குடி
- கடுவெளி
- கண்டியூர்
- கருப்பூர்
- கல்யாணபுரம் 1 சேத்தி
- கல்யாணபுரம் 2 சேத்தி
- கழுமங்கலம்
- காருகுடி
- கீழத்திருப்பந்துருத்தி
- குழிமாத்தூர்
- கோனேரிராஜபுரம்
- சாத்தனூர்
- செம்மங்குடி
- திருசோற்றுதுரை
- திருப்பாலனம்
- திருவலம்பொழில்
- தில்லைஸ்தானம்
- நடுக்காவேரி
- புனவாசல்
- பூதராயநல்லூர்
- பெரமூர்
- மகாராஜபுரம்
- மரூர்
- மன்னார்சமுத்திரம்
- முகாசாகல்யாணபுரம்
- ராயம்பேட்டை
- வடுகக்குடி
- வரகூர்
- வளப்பக்குடி
- வானராங்குடி
- விண்ணமங்கலம்
- விலாங்குடி
- வெங்கடசமுத்திரம்
- வெல்லம்பெரம்பூர்
- வைத்தியநாதன்பேட்டை