வரகூர் ஊராட்சி (தஞ்சாவூர்)

இதையும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகூர் ஊராட்சியையும் குழப்பிக்கொள்ளதீர் .

வரகூர் ஊராட்சி (Varagur Gram Panchayat), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6]

வரகூர்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி தஞ்சாவூர்
மக்களவை உறுப்பினர்

எஸ். எஸ். பழனிமாணிக்கம்

சட்டமன்றத் தொகுதி திருவையாறு
சட்டமன்ற உறுப்பினர்

துரை சந்திரசேகரன் (திமுக)

மக்கள் தொகை 2,833
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் தொகை தொகு

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சியில் மொத்தம் 2,833 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 719 வீடுகள் உள்ளன.[7]

தொழில் தொகு

இங்கு பச்சைப் பசேல் வயல் பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு நெல், வாழை, கரும்பு, வெற்றிலை ஆகியவை அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன.

பிற தகவல் தொகு

இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 350 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவிற்குள் திருக்காட்டுப்பள்ளி, பூண்டி ஆகிய சமயத் தலங்கள் உள்ளன. இவ்வூரில் புகழ் பெற்ற வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் உறியடித்திருவிழா, தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ் பெற்றதாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "திருவையாறு வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "varagur village".

வெளி இணைப்புகள் தொகு