தி. சே. சௌ. ராஜன்

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
(தி. சே. செள. ராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன் (iruvengimalai Sesha Sundara Rajan, டி. எஸ். எஸ். ராஜன், 1880–1953) ஒரு தமிழக அரசியல்வாதி, மருத்துவர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1937-39 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் அமைச்சராக இருமுறை பணியாற்றியவர்.

மரு.
தி. சே. சௌ. ராஜன்
Tiruvengimalai Sesha Sundara Rajan
உணவு மற்றும் பொதுநலத்துறை அமைச்சர், சென்னை மாகாணம்
பதவியில்
1946–1951
பிரதமர்த. பிரகாசம்,
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
பொது நலத்துறை மற்றும் சமய அறநிலையத்துறை அமைச்சர், சென்னை மாகாணம்
பதவியில்
14 சூலை 1937 – 9 அக்டோபர் 1939
பிரதமர்இராசகோபாலாச்சாரி
ஆளுநர்ஜான் எர்ஸ்கின்
அரச சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1934–1936
தலைமை ஆளுநர்பிரீமேன் பிரீமேன்-தோமசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1880
திருவரங்கம் வட்டம், சென்னை மாகாணம்
இறப்பு1953 (அகவை 72–73)
சென்னை
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிதூய வளனார் கல்லூரி, திருச்சி,
இராயபுரம் மருத்துவக் கல்லூரி, சென்னை
வேலைமருஹ்துவர், அரசியல்வாதி
தொழில்மருத்துவர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சீரங்கத்தில் வடகலை ஐய்யங்கார் சாதியில் பிறந்த ராஜன், திருச்சி புனித வளனார் கல்லூரியில் கல்வி கற்றார். சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார்.[1] பர்மாவுக்கு குடிப்யெர்ந்து[1] ரங்கூன் நகரில் மருத்துவராகப் பணியாற்றினார்.[2] 1907ல் இங்கிலாந்து சென்று மருத்துவ மேல்படிப்பு படித்து எப். ஆர். சி. எஸ் பட்டம் பெற்றார்.[1][3] பர்மாவில் பல ஆண்டுகள் மருத்துவப் பணியாற்றிய பின்னர் இந்தியா திரும்பி “ராஜன் மருத்துவமனை” என்ற பெயரில் தனி மருத்துவமனை தொடங்கினார்.[1]

ராஜாஜியுடன் ஏற்பட்ட நட்பினால் இந்தியத் தேசியக் காங்கிரசில் இணைந்தார் ராஜன். ரௌலட் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். 1920-22ல் கிலாபத் ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக இருந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுப் பதினெட்டு மாதங்கள் சிறை தண்டை பெற்றார். இந்தியத் தேசியக் காங்கிரசில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பொதுச் செயலாளர், தலைவர், மாநிலச் செயலாளர் என பல பதவிகளை வகித்தார். 1934-36ல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகப் பணியற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் பொதுச் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1939ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியா ஈடுபடுத்தப்படுவதை கண்டித்து காங்கிரசு அமைச்சரவைகள் அனைத்தும் பதவி விலகின. 1946 தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று மீண்டும் பதவியேற்ற போது த. பிரகாசத்தின் அமைச்சரவையில் உணவு மற்றும் பொதுச் சுகாதாரத்துறை அமைச்சரானார். அடுத்த ஐந்தாண்டுகளில் மோட்டார் வாகனத் துறை, தொழிலாளர் நலம், இந்து அறநிலையத்துறை போன்ற பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். 1953ல் மரணமடைந்தார். வ. வே. சு. ஐயர் பற்றிய ஒரு நூலையும், “நினைவு அலைகள்" என்ற தன் வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Biography:T. S. S. Rajan from the Haripura Congress Souvenir". Indian National Congress. 1938.
  2. Baliga, B. S. (2000). Madras District Gazetteers. Superintendent, Govt. Press. p. 239.
  3. "Dr. Rajan passes away". The Hindu: This day that age. 28 அக். 2003 இம் மூலத்தில் இருந்து 2004-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040328074940/http://www.hindu.com/2003/10/28/stories/2003102800010900.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சே._சௌ._ராஜன்&oldid=3943833" இலிருந்து மீள்விக்கப்பட்டது