தீபக் குமார்

இந்திய துப்பாக்கி சுடும் வீரர்

தீபக் குமார் (Deepak Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரராவார். 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 அன்று இவர் பிறந்தார். இந்திய விமானப்படையில் பணிபுரிகிறார். படிப்படியாக பதவி உயர்வின் மூலம் விமானப்படை அதிகாரியாக உயர்ந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டிணைவு போட்டியின் 10 மீ காற்றுத் துப்பாக்கி சுடும் பிரிவில் கலப்பு அணியில் இவர் பங்கேற்றார். மெகுலி கோசுடன் இணைந்து இப்போட்டியில் தீபக் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1][2]

காவல் வீரர்
தீபக் குமார்
Deepak Kumar
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு5 நவம்பர் 1987 (1987-11-05) (அகவை 37)
தில்லி, இந்தியா
இராணுவப் பணி
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்திய வான்படை
தரம் Sergeant
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதுப்பாக்கி சுடுதல்
நிகழ்வு(கள்)10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் குறி பார்த்துச் சுடுதல்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 யாகர்த்தா-பாலெம்பாங்கு 10மீ காற்றுத் துப்பாக்கி
பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 குவாதலாயாரா 10 மீ காற்றுத் துப்பாக்கி கலப்பு அணி
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2017 பிரிசுபேன் 10 மீ காற்றுத் துப்பாக்கி
20 August 2018 இற்றைப்படுத்தியது.

2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Deepak-Mehuli claim bronze". The Tribune. 7 March 2018. http://www.tribuneindia.com/news/sport/deepak-mehuli-claim-bronze/554144.html. பார்த்த நாள்: 8 April 2018. 
  2. "Asian Games: Shooter Deepak Kumar wins air rifle silver". தி எகனாமிக் டைம்ஸ். 20 August 2018. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018.
  3. "India names Tokyo Olympics shooting team, Elavenil Valarivan makes cut". Olympic Channel. பார்க்கப்பட்ட நாள் 2021-04-10.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_குமார்&oldid=3742725" இலிருந்து மீள்விக்கப்பட்டது