தீபாங்கர் தத்தா

தீபாங்கர் தத்தா (Dipankar Datta)(பிறப்பு: 9 பிப்ரவரி 1965) என்பவர் இந்திய நீதிபதி மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார்.[1]

மாண்புமிகு தலைமை நீதிபது
தீபாங்கர் தத்தா
Dipankar Datta
தலைமை நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 ஏப்ரல் 2020
பரிந்துரைப்புஎஸ். ஏ. பாப்டே
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்பா. பி. தர்மாதிகார்
நீதிபதி, கல்கத்தா உயர் நீதிமன்றம்
பதவியில்
22 ஜூன் 2006 – 27 ஏப்ரல் 2020
பரிந்துரைப்புயோகேசு குமார் சபர்வால்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 பெப்ரவரி 1965 (1965-02-09) (அகவை 59)
முன்னாள் கல்லூரிஹஸ்ரா சட்டக் கல்லூரி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

தத்தா 1965இல் பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சட்டப் பின்னணியினைக் கொண்ட குடும்பமாகும். இவரது தந்தை சலில் குமார் தத்தா ஆவார். இவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவரது மனைவியின் சகோதரர் நீதிபதி அமிதவ ராய், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். தத்தா தனது இளங்கலைச் சட்டப் படிப்பினை கல்கத்தா பல்கலைக்கழகத்தின் அசிரா சட்டக் கல்லூரியில் பயின்றார். இவர் 1989ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட 5 வருடச் சட்டப் படிப்பினை முடித்தவர் ஆவார்.[2]

நீதிபதி பதவியில்

தொகு

இளங்கலைச் சட்டப் படிப்பினை முடித்த பிறகு தத்தா நவம்பர் 16, 1989 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். இவர் கல்கத்தா உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார் மாநில வழக்கறிஞர் குழுவிலும் பணியாற்றினார். இவர் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள பிற உயர் நீதிமன்றங்களிலும் பயிற்சி பெற்றார். இவர் அரசியலமைப்பு விவகாரங்கள் மற்றும் சொத்துரிமை வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவராவார். தத்தா 1998 முதல் இந்திய ஒன்றியத்தின் ஆலோசகராக இருந்தார். பள்ளிக் கல்வித் துறை, கல்கத்தா பல்கலைக்கழகம், மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையம் ஆகியவற்றின் சார்பாக இவர் வழக்குகளில் பங்கேற்றார். இவர் 16 மே 2002 முதல் 16 ஜனவரி 2004 வரை மேற்கு வங்க மாநிலத்தின் இளநிலை அரசு ஆலோசகராக இருந்தார். தத்தா 1996 - 1997 முதல் 1999 - 2000 வரை ஹஸ்ரா சட்டக் கல்லூரியில் வருகை விரிவுரையாளராகவும் இருந்தார். இவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஒரு இருக்கையின் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர் நிரந்தர நீதிபதியாக 22 ஜூன் 2006 கல்கத்தாவில் பதவியேற்றார்.[3]

ஏப்ரல் 23, 2020 அன்று, தத்தா பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 28 ஏப்ரல் 2020 அன்று பதவியேற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Calcutta High Court biography". Archived from the original on 3 February 2013. பார்க்கப்பட்ட நாள் 4 December 2012.
  2. "বিমান-ট্রেন বন্ধ, কাজে যোগ দিতে গাড়িতেই মুম্বই-শিলং পাড়ি বিচারপতিদের". https://www.anandabazar.com/state/lockdown-in-india-kolkata-justice-to-drive-down-mumbai-to-take-oath-as-chief-justice-dgtl-1.1141116?ref=home-pq-six-stry-6. 
  3. "Calcutta High Court - Judges". www.calcuttahighcourt.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  4. Hon'ble Justices. "HON'BLE THE CHIEF JUSTICE". bombayhighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபாங்கர்_தத்தா&oldid=3995614" இலிருந்து மீள்விக்கப்பட்டது