தீபாரீத்தீ
தீபாரீத்தீ (Tifariti, எழுத்துப்பெயர்ப்பு "தீபாரீத்தீ"; அரபு மொழி: تيفاريتي) மேற்கு சகாராவின் வடகிழக்கில் உள்ள பாலைவனச்சோலை நகரமாகும். இது மோரோக்கோவின் சுற்றின் கிழக்கே இசுமராவிரிருந்து 138 கிமீ தொலைவிலும் மூரித்தானியாவின் எல்லையிலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பொலிசரியோவினால் விடுவிக்கப்பட்ட ஆள்புலம் என்றும் மொரோக்கோவால் இடைநிலை வலயம் என்றும் அறியப்படும் பகுதியில் உள்ளது. பீர் லெலூவிலிருந்து 2011இல் இடம் பெயர்ந்த சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின் நடைமுறைப்படி தற்காலிக தலைநகரமாக உள்ளது. இது சகாராவிய குடியரசின் இரண்டாவது இராணுவப் பகுதியின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.
தீபாரீத்தீ
تيفاريتي தீபாரீத்தா | |
---|---|
நகராட்சி | |
ஆட்புலம் | மேற்கு சகாரா |
உரிமை கோரல் | மொரோக்கோ, சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு |
கட்டுப்பாட்டில் | சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு |
அரசு | |
• வகை | நகராட்சி[1] |
• மேயர் | மொகமது சலேம் தயா[2] |
ஏற்றம் | 490 m (1,610 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,000 |
2010 இல் தீபாரீத்தீயின் மக்கள்தொகை ஏறத்தாழ 3,000ஆக இருந்தது.[3]
தீபாரீத்தீயிலிருந்து 177 கி.மீ தொலைவிலுள்ள இசுமரா ஓர் புனிதத்தலமாகும்; இதனை மா எல் ஐனின் நிறுவினார்.[4] 320 கிமீ தொலைவிலுள்ள அல்சீரிய நகரமான டின்டூஃபில் சகாராவிய அகதிகள் முகாங்கள் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களுக்கும் இடையே டிபாரிட்டி அமைந்துள்ளது.
தீபாரீத்தீயிலுள்ள அரசுப் பகுதியில் சாகாராவிய குடியரசின் நாடாளுமன்றம், மருத்துவமனை, பள்ளிக்கூடம், பள்ளிவாசல் மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ளன.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Allocating seats for the liberated territories in Parliament will be considered in the next election (Official)". Sahara Press Service. 2012-02-20 இம் மூலத்தில் இருந்து 2014-09-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140912163454/http://www.spsrasd.info/en/content/allocating-seats-liberated-territories-parliament-will-be-considered-next-election-official. பார்த்த நாள்: 2012-02-07.
- ↑ "Minister of Defense receives Ross in liberated Tifariti". Sahara Press Service. 2012-03-11 இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222104831/http://www.spsrasd.info/en/content/minister-defense-receives-ross-liberated-tifariti. பார்த்த நாள்: 2012-03-11.
- ↑ "Navarra ondea en el Sahara" (in es). Diario de Navarra. 2010-03-18. http://www.diariodenavarra.es/20100318/navarra/navarra-ondea-sahara.html?not=2010031800545907&idnot=2010031800545907&dia=20100318&seccion=navarra&seccion2=sociedad&chnl=10. பார்த்த நாள்: 2010-09-10.
- ↑ Pista número 58: Smara – Tifariti