தீபிகா குண்டாஜி

தீபிகா குண்டாஜி (பிறப்பு -1963) ஒரு இந்திய விவசாயி ஆவார். இவருடைய விவசாய முறைகள் தேசிய கவனத்தையும் இந்திய அரசாங்கத்தின் விருதையும் பெற்றன. நாரி சக்தி புரஸ்கார் விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இவருக்கு வழங்கினார். இந்த விருது பெண்களுக்கான இந்தியாவின் உயரிய குடிமகன் விருதாகும்.

தீபிகா குண்டாஜி
2017ல் தீபிகா குண்டாஜி
பிறப்பு1963
தேசியம்இந்தியர்
கல்விதொல்லியல்
அறியப்படுவதுஇந்திய நிலங்களின் பண்பை மீட்டெடுப்பதற்காக

வாழ்க்கை தொகு

இவர் 1963 இல் பிறந்து தனது குழந்தைப் பருவத்தை கர்நாடகாவில் கழித்தார். மேலும் இவர் தொல்லியல் ஆய்வாளராகப் பயிற்சி பெற்று திருமணமானவர்.[1]

பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் கூழாங்கல் தோட்டத்தை ஒரு பரிசோதனையாக உருவாக்கியுள்ளார். கூழாங்கல் தோட்டம் உலர்ந்த மதிப்பற்ற நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.[2] வெளிப்புற இரசாயனங்கள் அல்லது இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் அவர் நிலத்தின் தன்மையை மாற்றுகிறார். தாவரங்கள் பெரும்பாலும் காற்றில் இருந்து உருவாக்கப்படுகின்றன என்பதையும் அவற்றில் ஒரு சிறிய பகுதி மட்டுமே மண்ணிலிருந்து வருகிறது என்பதையும் அவர் அறிவார். அவர் செழிக்கும் சில செடிகவகைகளைப் பெற முடிந்தால், அவை இறக்கும் போது அவை உரமாக மாற்றப்படும். இது ஆரம்பித்தவுடன் மற்ற வகைகளை அறிமுகப்படுத்தலாம்.

அவர் தனது கணவர் பெர்னார்ட் டெக்லெர்க்குடன் 1994 முதல் பணிபுரியத் தொடங்கினார். மேலும் அவர்கள் 9 ஏக்கர் கூழாங்கல் தோட்டத்தில் வெளியாட்களைப் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலம், பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய காலனித்துவவாதிகளால் பாதிக்கப்பட்டு, அழிக்கப்பட்ட காடுகளின் பாழடைந்த ஒரு வகை நிலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர்கள் தங்கள் நிலத்தை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் கண்டறிந்தால், இந்தியாவில் அத்தன்மை கொண்டுள்ள 93 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் உற்பத்தி மற்றும் நிலையான பயன்பாட்டிற்கு மீட்டெடுக்க உதவும்.[3]

2009ல் விதைகளின் முக்கியத்துவம் பற்றிப் குண்டாஜி பேசியிருந்தார். ஆரோவில்லில் உள்ள உள்ளூர் விவசாயிகள் தங்கள் விதைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் நம்புகிறார். பாழ்நிலம் 80-90 வரையிலான வெவ்வேறு விதை வகைகளைப் பயன்படுத்தி மெதுவாக மாற்றப்படுகிறது. ஆனால் இது வெற்றியை அடைய அவர்கள் சுமார் 3,000 விதைகளை சேமித்து விநியோகிக்க வேண்டும்.[4] கடினமான வகைகளில் நிலத்தைச் சீரமைக்கும் வகையில் அவை பாதுகாக்கப்படுவதை அவர் உறுதி செய்கிறார். காலநிலை மாற்றத்தில் குண்டாஜி கவனம் செலுத்துகிறார். 10,000 ஆண்டுகளாக மனிதர்கள் பயிர்களை பயிரிட்டு வருவதாகவும், கிடைக்கும் பயிர் வகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குண்டாஜி குறிப்பிடுகிறார்.[5]

அவருக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டது. இந்த விருது பெண்களுக்கான இந்தியாவின் உயரியகுடிமகன் விருதாகும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. name="nyt">Chandrasekaran, Anupama (2013-05-30). "For Farmers Fearing Drought, Auroville Offers Some Lessons". India Ink (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-16.
  2. Ministry of Women & Child Development Govt of India (19 March 2018). "Deepika Kundaji - Nari Shakti Awardee 2017". You Tube - Ministry of Women & Child Development Govt of India. பார்க்கப்பட்ட நாள் 16 May 2020.
  3. "Holding the Cosmos in Our Hands". National Geographic Society Newsroom (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-25. பார்க்கப்பட்ட நாள் 2020-05-16.
  4. "Sowing seeds of consciousness - Presentations from the South Asia Conference on "Outstanding Organic Agriculture Techniques", Bangalore organised by OFAI (2009)". India WaterPortal. 2009. Archived from the original on 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 16 May 2020.
  5. Chandrasekaran, Anupama (2013-05-30). "For Farmers Fearing Drought, Auroville Offers Some Lessons". India Ink (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-16.Chandrasekaran, Anupama (2013-05-30). "For Farmers Fearing Drought, Auroville Offers Some Lessons". India Ink. Retrieved 2020-05-16.
  6. "Nari Shakti of 30 women to be honoured at Rashtrapati Bhavan". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_குண்டாஜி&oldid=3925237" இலிருந்து மீள்விக்கப்பட்டது