தீரஜ் சிங் தாக்கூர்
தீரஜ் சிங் தாக்கூர் (Dhiraj Singh Thakur)(பிறப்பு ஏப்ரல் 25,1964) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். தாக்கூர் பம்பாய் உயர் நீதிமன்றம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார்.
மாண்புமிகு தீரஜ் சிங் தாக்கூர் | |
---|---|
4வது தலைமை நீதிபதி of ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 சூலை 2023 | |
பரிந்துரைப்பு | தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
முன்னையவர் | பிரசாந்த் குமார் மிசுரா |
நீதிபதி-பம்பாய் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 10 சூன் 2022 – 27 சூலை 2023 | |
பரிந்துரைப்பு | என். வி. இரமணா |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி-சம்மு மற்றும் காசுமீர் மற்றும் இலடாக்கு உயர் நீதிமன்றம் | |
பதவியில் 8 மார்ச்சு 2013 – 9 சூன் 2022 | |
பரிந்துரைப்பு | அல்தமஸ் கபீர் |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 ஏப்ரல் 1964 |
தொழில்
தொகு1989 அக்டோபர் 18 அன்று தில்லி வழக்கறிஞர் குழுவிலும் பின்னர் சம்மு காசுமீர் வழக்கறிஞர் குழுவில் வழக்கறிஞராகவும் சேர்ந்தார். 2011ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இவர், 8 மார்ச் 2013 அன்று சம்மு காசுமீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். இவர் 10 சூன் 2022 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார். தாக்கூர் சூலை 28,2023 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.