தீர்த்தாண்டதானம்

தீர்த்தாண்டதானம் (Theerthandathanam), தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புல்லக்கடம்பன் ஊராட்சியில் அமைந்த கடற்கரை கிராமம் ஆகும். இது கிழக்கு கடற்கரை சாலையில், வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 623409 மற்றும் அஞ்சலகம் தொண்டியில் உள்ளது.

இக்கிராமத்தில் தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தேஸ்வரர் கோயில்[1] உள்ளது. ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இக்கிராமக் கோயிலின் சகல தீர்த்தக் குளத்தில் நீராட பாவங்கள் நீங்கும் என்பது இந்து சமயத்தவர்களின் தொன்ம நம்பிக்கை ஆகும்.

இக்கிராமத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில் உள்ளது. இதனருகில் வட்டானம் ஊராட்சி, வடக்கில் சுந்தரபாண்டியன்பட்டிணம் ஊராட்சி, தெற்கில் தொண்டி பேரூராட்சி உள்ளது. இது திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)க்கு உட்பட்டது.

அமைவிடம்

தொகு

தீர்த்தாண்டதானம் திருவாடானை]க்கு வடகிழக்கில் 26 கிலோ மீட்டர் தொலைவிலும், தொண்டிக்கு வடக்கில் 14 கிலோ மீட்டர் தொலைவிலும், இராமநாதபுரத்திற்கு வடக்கே 62 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தாண்டதானம்&oldid=3760432" இலிருந்து மீள்விக்கப்பட்டது