துங்கர்பூர் மருத்துவக் கல்லூரி

துங்கர்பூர் மருத்துவக் கல்லூரி (Dungarpur Medical College) என்பது இந்தியாவில் இராசத்தானின் துங்கர்பூரில் உள்ள ஒரு முழுமையான மருத்துவக் கல்லூரியாகும். இக்கல்லூரி 2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி மருத்துவத்தில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் பட்டப்படிப்பை வழங்குகிறது. செவிலியம் மற்றும் மருத்துவத் துணைப்பிரிவுப் படிப்புகளும் இங்கு வழங்கப்படுகின்றன. இந்தக் கல்லூரி இராசத்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் கல்லூரிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இக்கல்லூரியில் 2018 ஆகத்து கல்வி ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளைத் தொடங்கியுள்ளது.[1]

துங்கர்பூர் மருத்துவக் கல்லூரி
வகைமருத்துவம் கல்லூரி & மருத்துவமனை
உருவாக்கம்2018; 6 ஆண்டுகளுக்கு முன்னர் (2018)
அமைவிடம்,
சேர்ப்புஇராசத்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
இணையதளம்https://education.rajasthan.gov.in/content/raj/education/dungarpur-medical-college/en/home.html#

படிப்புகள்

தொகு

துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பினை மேற்கொள்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "17 New Medical Colleges opening in the Nation; 2330 New MBBS Seats". 21 May 2018.

வெளி இணைப்புகள்

தொகு