துசிடிடீஸ் பொறி

துசிடிடீஸ் பொறி (Thucydides Trap) என்பது அமெரிக்க அரசியல் அறிவியலாளரான கிரகாம் அல்லிசன் பிரபலப்படுத்திய ஒரு சொற்றொடர் ஆகும். பிராந்திய அளவில் அல்லது சர்வதேச அளவில் உளதாயிருக்கும் உலக வல்லரசின் ஆதிக்கத்தை வளரும் அரசானது பெற நினைக்கும் காரணத்தால் போரைத் தூண்டு மனப்பாங்கு ஏற்படுவதை விளக்க இச்சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.[1] அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே போராக மாற வாய்ப்புள்ள சூழ்நிலையை விளக்குவதற்காக முதன்மையாக இச்சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.[2]

துசிடிடீசின் மார்பளவுச் சிலை

பண்டைய ஏதெனிய வரலாற்றாளர் மற்றும் இராணுவத் தளபதியுமான துசிடிடீஸின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு, இச்சொற்றொடர் உருவாக்கப்பட்டது. ஏதெனிய அரசின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய எசுபார்த்தா, ஏதெனிய அரசுடன் நடத்திய பெலோபொன்னேசியப் போரை குறிக்க இச்சொற்றொடர் துசிடிடீஸால் பயன்படுத்தப்பட்டது.[3][4]

இந்தக் கோட்பாட்டிற்கு ஆதரவளிக்கும் விதமாக, கிரகாம் அல்லிசன் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வை நடத்தினார். வளர்ந்து வரும் சக்தியானது ஒரு ஆளும் சக்திக்கு எதிராக வந்த 16 வரலாற்று சூழ்நிலைகளில், 12 சூழ்நிலைகள் போரில் முடிந்தன என்பதை அவர் கண்டறிந்தார். இருந்தும் இந்த ஆய்வானது குறிப்பிடத்தக்க அளவுக்கு விமர்சிக்கப்பட்டது. அமெரிக்கா-சீன இராணுவச் சண்டை ஏற்படலாம் என்பதற்கு இச்சொற்றொடர் பயன்படுத்தப்படுவதில் அறிஞர்கள் இடையே வேறுபாடு உள்ளது.

மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. Mohammed, Farah (5 November 2018). "Can the U.S. and China Avoid the Thucydides Trap?". JSTOR Daily. Archived from the original on 1 January 2020. பார்க்கப்பட்ட நாள் 8 July 2020.
  2. Gideon Rachman (18 December 2018). "Year in a Word: Thucydides's trap". பைனான்சியல் டைம்ஸ். https://www.ft.com/content/0e4ddcf4-fc78-11e8-aebf-99e208d3e521. 
  3. Graham Allison (24 September 2015). "The Thucydides Trap: Are the U.S. and China Headed for War?". The Atlantic. https://www.theatlantic.com/international/archive/2015/09/united-states-china-war-thucydides-trap/406756/. 
  4. Graham Allison (9 June 2017). "The Thucydides Trap". Foreign Policy. https://foreignpolicy.com/2017/06/09/the-thucydides-trap/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துசிடிடீஸ்_பொறி&oldid=3845284" இலிருந்து மீள்விக்கப்பட்டது