பைனான்சியல் டைம்ஸ்

தி பைனான்சியல் டைம்ஸ் (ஆங்கிலம்: The Financial Times) என்பது வணிகம் மற்றும் பொருளாதாரச் செய்திகளை வெளியிடும் சர்வதேச ஆங்கில நாளிதழ் ஆகும். 1888 இல் ஜெம்ஸ் ஸரிடன் மற்றும் ஹோரடோ பாட்டம்லே என்பவர்களால் தொடங்கப்பட்டு, 1884 இல் தொடங்கப்பட்ட பைனாசியல் நியூஸ் என்கிற ஒத்த வகைப் போட்டிப் பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டது. 2011 நவம்பரில், பி.டபிள்யூ.சி கணிப்பின்படி தி பைனான்சியல் டைம்ஸ் இதழானது சராசரியாக ஒரு நாளைக்கு 2.2 மில்லியன் மக்களால் உலகமுழுதும் வாசிக்கப்படுகிறது. FT.com தளத்தில் பதிவு செய்த பயனர்கள் 4.5 மில்லியனும்[2] இணையச் சந்தாதாரர்கள் 910,000 பேரும் உள்ளனர்[3] சீனாவில் மட்டும் 1.7 மில்லியன் பதிவுபெற்ற பயனர்கள் உள்ளனர்.[4] உலகமுழுதும் பைனாசியல் டைம்ஸ் நாளிதழானது ஒருநாளைக்கு 234,193 பிரதிகள் (அதில் 88000 பிரதிகள் ஐக்கிய இராஜ்யம்) 2014 ஜனவரி கணக்கின்படி விநியோகம் செய்யப்படுகிறது.[5] 2014 பிப்ரவரி இல் உலகம் முழுக்க மொத்த விற்பனை 224,000 பிரதிகளாக இருந்தது. 2013 அக்டோபர் இல் அச்சு விற்பனையும், இணைய விற்பனையும் மொத்தமாக 629,000 பிரதிகளாக, 125 ஆண்டு வரலாற்றில் அதிக விநியோகம் இருந்தது.[6] 2016 டிசம்பர் மாதத்தில் அச்சு இதழ் விற்பனையானது 193,211 பிரதிகள் என்று பத்து சதவிகிததிற்கும் கீழே குறைந்தது.[7]

பைனான்சியல் டைம்ஸ்
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)தி நிக்கி
ஆசிரியர்லயனில் பார்பர்
நிறுவியது9 சனவரி 1888; 136 ஆண்டுகள் முன்னர் (1888-01-09)
தலைமையகம்ஒன் சவுத்வார்க் பிரிஜ் ரோடு, லண்டன் ஐக்கிய இராஜ்யம்
விற்பனை185,747 (as of மார்ச் 2018)[1]
ISSN0307-1766
இணையத்தளம்www.ft.com
நாடுஐக்கிய இராஜ்யம்

2015 ஜூலை 23 இல் தி நிக்கி என்ற நிறுவனம் பியர்சன் நிறுவனத்திடமிருந்து £844m ($1.32 பில்லியன்) மதிப்பிற்கு பைனான்சியல் டைம்ஸ் இதழை விலைக்கு வாங்கியது.[8] On 30 November 2015 Nikkei completed the acquisition.[9]

வரலாறு தொகு

 
1888 பிப்ரவரி 13 இல் பைனான்சியல் டைம்ஸ் இதழின் முன்பக்கம்

ஆரம்பத்தில் "லண்டன் பைனான்சியல் கைடு" என்ற பெயரில் 1888 ஜனவரி 10 இல் தொடங்கப்பட்டு, அதே ஆண்டில் பிப்ரவரி 13 இல் தற்போதைய பெயரான பைனான்சியல் டைம்ஸ் எனப் பெயர் மாற்றப்பட்டது. நான்கு பக்கம் கொண்ட பத்திரிக்கையாக முதலீட்டாளர்கள், நிதியாளர்களுக்குத் துணையாக வெளிவந்தது. லண்டன் மாநகர நிதிசார் மக்களே இதன் இலக்கு வாசகர்களாகும். பைனான்சியல் நியூஸ் என்ற ஒரேவொரு போட்டி பத்திரிக்கை மட்டுமே இருந்தது. 1893 ஜனவரி 2 ஆம் நாள் முதல் சால்மன் இளஞ்சிவப்பு வண்ணக் காகிதத்தில் அச்சாகி, தனது போட்டிப் பத்திரிக்கையைவிட வேறுபடுத்திக் காட்டியது.[10] 57 ஆண்டுகால போட்டிக்குப் பின்னர் பிரன்டன் பிராக்கென் மூலம் பைனான்சியல் டைம்ஸ் மற்றும் பைனான்சியல் நியூஸ் பத்திரிக்கையும் 1945 இல் இணைந்து ஆறுபக்க நாளிதழாக வெளிவந்தன.[11]

பியர்சன் நிறுவனம் 1957 இல் இப்பத்திரிக்கையை வாங்கினார்.[12] கால செல்லச் செல்ல வாசகர்களும், பக்க அளவும், செய்தியாழமும் அதிகரிக்கத் தொடங்கியது. உலகமயமாதலை நோக்கி உலகின் பல நகரங்களில் இதன் செய்தியாளர்களைக் கொண்டு உலகப் பொருளாதாரத்தை நோக்கி செய்திகளை அளிக்க முனைந்தது. வணிக மொழியான ஆங்கிலத்தில் இருப்பதால் 1970களில் எல்லை கடந்த வணிகம் மற்றும் முதலீட்டு ஓட்டத்தால் சர்வதேச விரிவாக்கத்தைச் செய்தது. 1979 ஜனவரி ஒன்றில் ஐக்கிய இராஜ்யத்தைத் தாண்டி பிராங்க்பர்டில் முதல் ஐரோப்பியக் கண்டப் பதிப்பை வெளியிட்டது. அதன் பின்னர் சர்வதேச செய்திகள் அதிகம் கொண்டு 22 நகரங்களில் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பியக்கண்டம், மத்திய கிழக்கு என ஐந்து சர்வதேசப் பதிப்புகளுடன் வெளிவரத் தொடங்கியது.[13]

ஐரோப்பியப் பதிப்பானது ஐரோக்கியக் கண்டம் மற்றும் ஆப்பிரிக்காவில் விநியோகிக்கப்பட்டது. இது திங்கள் முதல் சனிவரை ஐந்து மையங்களிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம், ஐரோ ஐரோப்பிய கூட்டாண்மை பற்றி செய்திகளை அளித்தது.[14]

1994 இல் ஆடம்பர வாழ்க்கை முறைக்கான இதழாக ஹவ் டூ ஸ்பென்ட் இட் என்ற இதழைத் தொடங்கியது. 2009 இல் தனி இணையத்தளமாகவும் இந்த இதழ் வெளியிடப்பட்டது.[15]

1995 மே 13 இல் FT.com என்ற தனது முதல் இணையச் செய்தித் தளத்தை உருவாக்கி இணையவுலகில் நுழைந்தது. உலகச் செய்திகளையும் வழங்கிய இணையத்தளம் 1995 மே 13 முதல் சந்தை நிலவரத்தையும் வெளியிடத் தொடங்கியது. விளம்பர வருவாயைக் கொண்டு இயங்கியதால் இணைய விளம்பரச் சந்தையை ஐக்கிய இராஜ்யத்தில் 1990களில் இதன் மூலம் உருவாக்கியது. 1997 முதல் 2000 வரை பல மாற்றங்களையும் மாறுதல்களையும் கொண்டு யுக்திகளை மாற்றி வந்தது. 2002 இல் இணையச் சந்தா வசதியையும் அறிமுகம் செய்தது.[16] இத்தகைய தனிநபர் சந்தாக்கள் மூலம் வெற்றிகரமாக இயங்கிவரும் ஒருசில ஐக்கிய இராஜ்யப் பத்திரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

 
ஒன் சவுத்வார்க் பிரிஜ்(2013) சாலையிலுள்ள பைனான்சியல் டைம்ஸ் லண்டன் அலுவலகம்

ஆசிரிய நிலைப்பாடு தொகு

இவ்விதழ் கட்டற்ற சந்தைமுறை[17] மற்றும் உலகமயமாதல் சித்தாந்தத்தை ஊக்குவிக்கிறது. 1980களில் மார்கரெட் தாட்சர் மற்றும் ரானல்ட் ரேகனின் நிதிக் கொள்கையை ஆதரித்தது.[18][19] நீல் கின்னோக் தலைமையிலான தொழிற்கட்சியை 1992 ஐக்கிய இராஜ்யப் பொதுத் தேர்தலில் ஆதரித்தது.

ஐரோப்பிய ஒன்றியச் சூழலில் பொதுப் பொருளாதாரச் சந்தையை மிதமாக ஆதரித்து, சந்தையில் அரசியல் தலையீட்டை எதிர்க்கும் நிலையைக் கொண்டுள்ளது.[20][21] ஈராக் போரை கடுமையாக எதிர்த்தது.[20]

2008 இன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் [[பராக் ஒபாமா]|பராக் ஒபாமா]] வைத்த பாதுகாப்புவாதம் முதலிய கொள்கையினால் ஆதரித்தது.[22] The FT favoured Obama again in 2012.[23]

2010 ஐக்கிய இராஜ்ய பொதுத் தேர்தலில் லிபரல் டெமக்கிராட்சு கட்சியின் குடிசார் சுதந்திரம் மற்றும் அரசியல் சீர்திருத்த நிலைப்பாட்டை வரவேற்றது, உலகப் பொருளாதார நெருக்கடியின் போது அப்போதைய தொழிற்கட்சியின் தலைவர் கோர்டன் பிரவுனின் எதிர்வினையையும் பாராட்டியது, கன்சர்வேட்டிவ் கட்சியின் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுவாதத்தையும் வரவேற்றது.[24] 2017 பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியையே ஆதரித்தது.[25]

ஆசிரியர்கள் தொகு

 
2013 இல் 125 வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் லயனில் பார்பர் பேசுகிறார்
1889: டக்லஸ் மேக்ரே
1890: வில்லியம் ராமெஜ் லாசன்
1892: சிட்ணி முரே
1896: ஏ. இ. முரே
1909: சி. எச். பால்மர்
1924: டி. எஸ். டி. ஹன்டர்
1937: ஆர்சிபாட் சிஷொல்ம்
1940: ஆர்பர்ட் ஜார்ஜ் கொலே
1945: ஹர்கிரேவ்ஸ் பார்கின்சன்
1949: கோர்டன் நியூட்டன்
1973: பிரடி பிஷ்சர்
1981: சர் ஜெப்பிரி ஓவன்
1991: ரிச்சர்ட் லம்பர்ட்
2001: ஆன்ட்ரூ ஜோவர்ஸ்
2006: லயனில் பார்பர்


மேற்கோள்கள் தொகு

  1. "Financial Times has reported in accordance with ABC's industry-agreed standards for National Newspapers". ABC.org.uk. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.
  2. "Financial Times Annual Results 2017". aboutus.ft.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-13.
  3. "Financial Times Annual Results 2017". aboutus.ft.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-13.
  4. "About Us". Financial Times. Archived from the original on 3 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 February 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Sweney, Mark (14 February 2014). "The Sun enjoys post-Christmas sales bounce with 8.3% rise". The Guardian. https://www.theguardian.com/media/2014/feb/14/the-sun-post-christmas-sales-bounce. பார்த்த நாள்: 15 July 2014. 
  6. Greenslade, Roy (30 October 2013). "Financial Times reaches highest circulation in its 125-year history". தி கார்டியன். https://www.theguardian.com/media/greenslade/2013/oct/30/financialtimes-mediabusiness. பார்த்த நாள்: 20 January 2014. 
  7. "Print ABCs: Seven UK national newspapers losing print sales at more than 10 per cent year on year". Press Gazette. Archived from the original on 5 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 28 January 2017.
  8. "Financial Times sold to Nikkei by Pearson for £844m". BBC News.
  9. "Nikkei completes acquisition of Financial Times". Nikkei.
  10. "About the newspaper". ft.com. Financial Times. Archived from the original on 8 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 4 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "A brief history of the FT by David Kynaston, author of The Financial Times: A Centenary History" (PDF). Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
  12. "International Directory of Company Histories: Pearson plc History". Fundinguniverse.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
  13. "FT's Media Kit: FT Heritage and Innovation". Fttoolkit.co.uk. Archived from the original on 15 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "FT tour". Financialtimes.net. Archived from the original on 13 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
  15. "Financial Times launches How To Spend It online". Pearson. 1 October 2009. Archived from the original on 15 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
  16. "FT.com to launch improved website with new content and services for users, subscribers and advertisers". Pearson. 30 April 2002. Archived from the original on 15 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
  17. "Too Big to Fail undermines the free market faith". Financial Times.
  18. "Margaret Thatcher: Right about nearly everything". Financial Times.
  19. "Demise of Reaganomics poses grave intellectual challenge to Republicans". Financial Times. Archived from the original on 2015-04-08. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.
  20. 20.0 20.1 Lionel Barber (12 February 2013). "FT at 125: The world in focus". Financial Times. http://www.ft.com/cms/s/2/6fce6e6e-711c-11e2-9d5c-00144feab49a.html#axzz2Kia8f6ch. பார்த்த நாள்: 12 February 2013. 
  21. "Europe needs a bold reformer". FT.com. 29 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 July 2014.
  22. "Obama is the better choice". Financial Times. http://www.ft.com/cms/s/0/1d0b127c-a380-11dd-942c-000077b07658.html. பார்த்த நாள்: 22 April 2013. 
  23. "Obama the wiser bet for crisis-hit US". Financial Times. 5 November 2012. பார்க்கப்பட்ட நாள் 5 November 2012.
  24. "Financial Times backs Conservatives". Reuters. 4 May 2010. http://uk.reuters.com/article/idUKTRE64304Z20100504. பார்த்த நாள்: 28 February 2011. 
  25. Subscribe to read. 'Election 2017: The safer bet of a Conservative vote'. The Financial Times. Retrieved 1 June 2017.

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Financial Times
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைனான்சியல்_டைம்ஸ்&oldid=3792344" இலிருந்து மீள்விக்கப்பட்டது