துரை. மணிகண்டன்

துரை. மணிகண்டன் ஒரு தமிழக எழுத்தாளர், இணையத்தமிழ் ஆய்வாளர் தஞ்சாவூர் மாவட்டம், கச்சமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்த இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இணையத்தில் ஈடுபாடு கொண்டுள்ள இவர் “இணையத்தில் தமிழ்” எனும் தலைப்பில் 125 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உரை நிகழ்த்தியுள்ளார். இணையத்தில் 20க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட தமிழ் இணைய மாநாட்டில் “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்” எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.

முனைவர் துரை. மணிகண்டன்

எழுதியுள்ள நூல்கள் தொகு

  1. இணையமும் தமிழும் - நல்நிலம் பதிப்பகம், சென்னை - 2009
  2. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை- 2010
  3. இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை- 2011
  4. தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் - கமலினி பதிப்பகம், தஞ்சாவூர். - 2012
  5. ஒப்பிலக்கியப் படைப்பும் திறனாய்வும் - கமலினி பதிப்பகம், தஞ்சாவூர்- 2016
  6. ஊடகவியல், கமலினி பதிக்கம். கமலினி பதிப்பகம், தஞ்சாவூர் - 2018.
  7. இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி- கமலினி பதிப்பகம், தஞ்சாவூர் - 2021.

பரிசு மற்றும் சிறப்புகள் தொகு

  • இணையமும் தமிழும் எனும் நூல் திருச்சிராப்பள்ளி ஈ. வே. ரா கல்லூரியில், இளங்கலை தமிழ் - முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் பாடமாக இந்த ஆண்டு (2010-லிருந்து) வைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]
  • இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் எனும் நூல் திருச்சிராப்பள்ளி, முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையம் வழங்கும் படைப்பியல் பட்டயம்-2010 சான்றிதழ் மற்றும் ரூ 5000/- ரொக்கப் பரிசும் பெற்றிருக்கிறது.[சான்று தேவை]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை._மணிகண்டன்&oldid=3492985" இலிருந்து மீள்விக்கப்பட்டது