துர்காபூர் மகளிர் கல்லூரி
துர்காபூர் மகளிர் கல்லூரி,[1] என்பது மேற்கு வங்காளத்தின் எஃகு நகரமான மேற்கு வர்த்தமான் மாவட்டத்திலுள்ள துர்காபூரில் 1980[2] ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும், கலை, அறிவியல் மற்றும் வணிகம் ஆகியப்பிரிவில் இளங்கலை படிப்புகளை பயிற்றுவிக்கப்படும் இக்கல்லூரி காசி நஸ்ருல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது[3].
வகை | இளங்கலைக்கான பொதுக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1980 |
சார்பு | காசி நஸ்ருல் பல்கலைக்கழகம்; தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
முதல்வர் | திருமதி எம்.ஜஜோடியா |
அமைவிடம் | மகாத்மா காந்தி சாலை, சிட்டி சென்டர், , , , 713209 , 23°33′06″N 87°17′49″E / 23.5515278°N 87.2970776°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | Durgapur Women's College |
"பெண்களுக்கு அதிகாரமளித்தல்" என்பதை தன் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ள இக்கல்லூரி, முதன்முதலில் டேவிட் ஹேர் தொடக்கப் பள்ளியில் தற்காலிகமாக நடத்தப்பட்டு 1982 முதல் மகாத்மா காந்தி சாலையில் அதன் சொந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
துறைகள்
தொகுஅறிவியல் பிரிவு
தொகு- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- மின்னணு
- விலங்கியல்
- புவியியல்
- உளவியல்
- பொருளாதாரம்
- தாவரவியல்
கலைப்பிரிவு
தொகு- தத்துவம்
- ஆங்கிலம்
- வரலாறு.
- பெங்காலி
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- ஹிந்தி
- சமஸ்கிருதம்
- வணிகம்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [4]. இது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) B + + தரமளிக்கப்பட்டு,2.77 CGPA உடன் அங்கீகாரம் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கல்லூரியைப்பற்றி".
- ↑ "UGC இணைப்புக்கல்லூரிக்கள்".
- ↑ "Affiliated College of Kazi Nazrul University". Archived from the original on 2020-02-08. பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
- ↑ Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்