துர்புக் (Durbok), also spelled Durbuk and Darbuk), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள துர்புக் தாலுக்காவின் நிர்வாகத் தலைமையிடமும், கிராம ஊராட்சியும் ஆகும்.[2][3] இக்கிராமம் சங் லா கணவாய்க்கும், பாங்காங் ஏரிக்கும் இடையே அமைந்துள்ளது. துர்புக் கிராமத்தை, தவுலத் பெக் ஓல்டியுடன் இணைக்கும் துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை இக்கிராமத்திலிருந்து துவங்குகிறது.

துர்புக்
துர்போக் லகா
கிராமம்
துர்புக் is located in லடாக்
துர்புக்
துர்புக்
இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் துர்புக் கிராமத்தின் அமைவிடம்
துர்புக் is located in இந்தியா
துர்புக்
துர்புக்
துர்புக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°07′14″N 78°06′12″E / 34.1206°N 78.1034°E / 34.1206; 78.1034
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
தாலுக்காதுர்புக்[1]
ஏற்றம்4,115 m (13,501 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்852
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறியீடு எண்873

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, துர்புக் கிராமம் 160 வீடுகளும், 852 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. அதில் ஆண்கள் 416 மற்றும் பெண்கள் 436 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் பட்டியல் மலைவாழ் பழங்குடியினர் 846 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 66.62% ஆகவுள்ளது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 85 உள்ளனர். இக்கிராம மக்கள் திபெத்திய பௌத்தம் கடைபிடிக்கின்றனர்.[4]

போக்குவரத்து தொகு

லே மாவடத்தின் அனைத்து பகுதிகளுடன் துர்புக் கிராமம், சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. கரு எனும் கிராமத்திற்குச் செல்லும் சாலை சிந்து ஆற்றுடன் இணைத்து, பின் லே மற்றும் கார்கில் நகரங்களுடன் இணைக்கிறது. இதே சாலை எதிரி திசையில் உள்ள பாங்காங் ஏரியுடன் இணைக்கிறது. துர்புக் கிராமத்திற்கு மேற்கே சியோக் ஆறு வழியாகச் செல்லும் சாலை திஸ்கித் மற்றும் துர்துக் கிராமங்களை இணைக்கிறது.

துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலையானது சியோக் ஆற்றின் கிழக்கு பகுதியில் உள்ள தவுலத் பெக் ஓல்டி போன்ற இந்திய-சீன எல்லைப்புறத்தில் உள்ள இராணுவ மையங்களை இணைக்கிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்புக்&oldid=3558802" இருந்து மீள்விக்கப்பட்டது