துறோல்
துறோல் (ஆங்கில மொழி: Troll) என்பது ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் த லோட் ஒவ் த ரிங்ஸ் என்ற புதின புத்தகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தீய சக்தி கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை தழுவி திரைப்படங்கள்[1][2][3] மற்றும் நிகழ்ப்பட ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் பெரும் வலிமை மற்றும் மோசமான அறிவுத்திறன் கொண்ட கொடூரமான பெரிய மனித உருவங்களாக (சுமார் 9 அடி உயரம்) சித்தரிக்கப்படுகிறார்கள். இது ஹொபிட்டுகளை விரும்பி உண்ணும் மற்றும் சூரிய ஓளி பட்டதும் இவை கல்லாக மாறிவிடும்.
துறோல் | |
---|---|
த காபிட்டு, த லோட் ஒவ் த ரிங்ஸ் கதை மாந்தர் | |
அன் அன்எக்ஸ்பெக்டட் ஜெர்ன்னி படத்தில் மூன்று கல் துறோல் இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்கும் விதமாக நடிகர்கள் மார்க் ஹாட்லோ, வில்லியம் கிர்ச்சர் மற்றும் பீட்டர் ஹாம்பிள்டன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.[4]
சான்றுகள்
தொகு- ↑ Evans, Willy (3 March 2018). "15 Secrets You Didn't Know Behind The Making Of Lord Of The Rings". Screenrant. பார்க்கப்பட்ட நாள் 16 April 2020.
- ↑ Leitch, Thomas (2009). Film Adaptation and Its Discontents: From Gone with the Wind to The Passion of the Christ. Johns Hopkins University Press. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-9187-8.
- ↑ Bogstad, Janice M.; Kaveny, Philip E. (2011). Picturing Tolkien: Essays on Peter Jackson's The Lord of the Rings Film Trilogy. McFarland. pp. 65–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-8473-7.
- ↑ "The Hobbit Then and Now". The Insider. 2 January 2019. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் | |
---|---|
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட் |