துலோன் (பிரெஞ்சு மொழி: Toulon, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[tu.lɔ̃], ஒலிப்பு : து.லோ(ன்) ) தெற்கு பிரான்சில் அமைந்துள்ள ஒரு நகரம். பிரான்சின் முக்கியமான கடற்படைத் தளத்துடன் கூடிய நடுநிலக்கடற்கரையில் அமைந்த படைத்துறைத் துறைமுகமும் இங்கு அமைந்துள்ளது. 165,514 (2009) மக்கள்தொகையைக் கொண்ட துலோ கம்யூன் பிரான்சின் பதினைந்தாவது பெரிய நகரம். இது 559,421 (2008) மக்கள்தொகைகொண்ட நகர்ப்புறப் பகுதியொன்றின் மையமாக அமைந்துள்ளது. இது பிரான்சின் ஒன்பதாவது பெரிய நகர்ப்புறப் பகுதி.[1] நடுநிலக்கடற்கரையை அண்டிய பிரான்சின் நகரங்களில், துலோ நான்காவது பெரியது.

துலோன்
இடது மேல்: துலோன் ஒப்பேரா மாளிகை, வலது மேல்:மயோல் விளையாட்டரங்கம்(Le Stade du Mayol), 2வது: துலோன் நகரமையம், துறைமுகம் என்பவற்றைக் காட்டும் படம், 3வது இடம்: டி லா லிபேர்ட்டி இடம், 3வது வலம்: மொரிலோன் கடற்கரை, கீழ் இடம்:ஃபாரோன் மலைக்குச் செல்லும் தொங்கூர்தி, கீழ் வலம்:செயின்ட் லூயிசுக் கோட்டை
துலோன்-இன் கொடி
கொடி
துலோன்-இன் சின்னம்
சின்னம்
துலோன்-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
RegionProvence-Alpes-Côte d'Azur
திணைக்களம்Var
பெருநகரம்துலோன்
Intercommunalityதுலோன் மாகாணம்
அரசு
 • நகரமுதல்வர் (2008–2014) ஹியுபர்ட் பல்கோ
Area
1
42.84 km2 (16.54 sq mi)
மக்கள்தொகை
 (2011)
1,63,974
 • அடர்த்தி3,800/km2 (9,900/sq mi)
இனம்துலொனை
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
INSEE/அஞ்சற்குறியீடு
83137 /83000
ஏற்றம்0–589 m (0–1,932 அடி)
(avg. 1 m or 3.3 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

ஆல்ப்ஸ் மலைத்தொடர்களுக்கும் நடுநிலக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துலோன்&oldid=3376222" இலிருந்து மீள்விக்கப்பட்டது