துளசி படித்துறை

வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை

துளசி படித்துறை (Tulsi Ghat) வாரணாசியில் கங்கை ஆற்றங் கரையில் அமைந்துள்ள ஒரு படித்துறை ஆகும். ராம்சரிதமானசை எழுதியபோது இங்கு வாழ்ந்த துளசிதாசரின் பெயரிடப்பட்டது. முன்னதாக, இது லோலர்க் படித்துறை என்று அழைக்கப்பட்டது. 1941ஆம் ஆண்டில் தான் புகழ்பெற்ற தொழிலதிபர் பல்தேவ் தாசு பிர்லாவால் சீமைக்காரைகொண்டு செப்பனிடப்பட்டது.[1]

துளசி படித்துறை
அமைவிடம்
நாடு:இந்தியா
ஆள்கூறுகள்:25°17′23.4″N 83°0′23.435″E / 25.289833°N 83.00650972°E / 25.289833; 83.00650972
கோயில் தகவல்கள்

துளசி படித்துறையில் கலாச்சார நடவடிக்கைகள் தொகு

 
நாக நாதைய விழாவில் கிருஷ்ணர் கடம்ப மரத்தில் நிற்கிறார்.

இந்தப் படித்துறைக்கு அருகே அமைந்துள்ள லோலர்க் குண்டத்தில் குளித்துவிட்டு தங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் என்று லோலர்க் ஆதித்ய பிரபுவிடம் பிரார்த்தனை செய்வார்கள். தொழுநோயிலிருந்தும், தோல் நோய்களிலிருந்து விடுபடவும் புனித குளியல் போன்ற பல முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். லோலர்க் சாஸ்தியின் திருவிழா பத்ரபாத்தின் பிரகாசமான பாதியின் 6 வது நாளில் (பொதுவாக செப்டம்பரில்) வருகிறது.[2] இந்து சந்திர மாதமான கார்த்திகையின் போது (அக் / நவம்பர்), கிருஷ்ண லீலாவைப் பற்றிய ஒரு நாடகம் இங்கு மிகுந்த ஆரவாரத்துடனும் பக்தியுடனும் அரங்கேற்றப்படுகிறது..

துளசி படித்துறையில் செயல்பாடு தொகு

 
துளசி படித்துறையில் அமைந்துள்ள சங்கத் மோச்சன் அறக்கட்டளை அலுவலகம்

1982 ஆம் ஆண்டு முதல் கங்கையைச் சுத்தம் செய்யச் செயல்படும் அரசு சாரா அமைப்பான சங்கத் மோச்சன் அறக்கட்டளையின் அலுவலக தளம் இங்கு அமைந்துள்ளது. கங்கை துப்புரவு திட்டத்துடன் தொடர்புடைய மிகப்பெரிய பெயர்களில் சங்கத் மோச்சன் அறக்கட்டளையும் ஒன்றாகும். சுற்றுச்சூழல் ஆர்வலரும் சமூக ஆர்வலருமான பேராசிரியர். வீர் பத்ரா மிஸ்ரா இந்த அறக்கட்டளையின் மேலாளராக இங்கேயே தங்கியிருக்கிறார். 1992இல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் உலகளாவிய 500 சிறந்த சுற்றுசூழல் ஆர்வலர்களில் ஒருவராக மிஸ்ரா கௌரவிக்கப்பட்டார்.[3]

கொள்ளை தொகு

1623ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட துளசிதாசர் எழுதிய ராம்சரிதமானசத்தின் அவதி மொழியின் கையெழுத்துப் பிரதி 1701 முதல் துளசி படித்துறையிலிருக்கும் அனுமன்கோவிலில் இருந்தது. [4] இது, 2011 திசம்பரில் அக்கோவிலிலிருந்து திருடப்பட்டது.

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tulsi Ghat Ganga Ghats of Varanasi". பார்க்கப்பட்ட நாள் 7 January 2017.
  2. "Archived copy". Archived from the original on 3 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy". Archived from the original on 18 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. Srivastava, Piyush (24 December 2011). "Tulsidas's rare manuscript stolen from Varanasi temple". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 24 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_படித்துறை&oldid=3322738" இலிருந்து மீள்விக்கப்பட்டது