பல்தேவ் தாசு பிர்லா
பல்தேவ் தாசு குப்தா பிர்லா (Baldeo Das Birla) இவர் ஓர் இந்திய தொழில்முனைவோரும், அறக்காரியங்களை செய்தவருமாவார். கொல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவுவதில் இவரது பங்கிருந்தது. மேலும் தில்லியில் உள்ள பிர்லா மந்திர் என்றழைக்கப்படும் இலட்சுமிநாராயணன் கோயிலை நிறுவினார். இது மகாத்மா காந்தியால் 1939 இல் திறக்கப்பட்டது. [1]
இராஜா பல்தேவ் தாசு பிர்லா | |
---|---|
பிறப்பு | 1863 |
இறப்பு | 1956 |
பணி | தொழில் முனைவு |
சொத்து மதிப்பு | £10 மில்லியன் இந்திய ரூபாய் (1956) |
பெற்றோர் | சிவ நாராயணன் பிர்லா |
வணிகம்
தொகுபிரித்தன் சீனாவுடன் அபினி வர்த்தகம் செய்தபோது, சிவ நாராயணன் பிர்லாவின் வளர்ப்பு மகனான இவர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மற்ற வர்த்தகர்களுடன் கூட்டாக சரக்குக் கப்பல்களை சீனாவுக்கு அனுப்பி அபினி வர்த்தகத்தில் ஈடுபட்டார். 1887 ஆம் ஆண்டில், இவர் தனது வணிகத்தை கொல்கத்தாவில் அமைத்த்துக் கொண்டார். [2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவரது பேரன் யாஷ் பிர்லா எழுதிய ஒரு புத்தகத்தில், இவருக்கு ஆங்கிலேயர்களால் ராஜா என்று பெயரிடப்பட்டதாக தெரிவிக்கிறார். இவரும், இவரது மனைவியும் ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்ட எளிய மனிதர்கள் என்று புத்தகம் மேலும் கூறுகிறது. [3]
இவருக்கு ஜுகல் கிசோர், இராமேசுவர் தாசு, கன்சியாம் தாசு பிர்லா, பிரஜ் மோகன் பிர்லா என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.
இவருக்கு 1917 இல் ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டில், இவர் வணிகத்திலிருந்து ஓய்வு பெற்றார். மேலும் மதப் படிப்பைத் தொடர வாரணாசியில் வாழத் தொடங்கினார். 1925 ஆம் ஆண்டில், தும்ரான் மகாராஜாவால் இவருக்கு "ராஜா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. வாரணாசி இந்து பல்கலைக்கழகம் இவருக்கு இவருக்கு கௌரவ முனைவர் விருதும் வழங்கியது. .
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Making history with brick and mortar". ஹிந்துஸ்தான் டைம்ஸ். September 15, 2011 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121205200651/http://www.hindustantimes.com/Making-history-with-brick-and-mortar/Article1-745801.aspx.
- ↑ "Podcast | The business of family: Building with the Birlas". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.