துளசி மாடம்
துளசி மாடம் (Tulasi Vrindavana) என்பது பாரம்பரிய இந்துக்களின் வீடுகளுக்கு முன்னால், புனிதமான துளசி செடியைக் கொண்ட ஒரு சிறிய மேடை போன்ற கல் அல்லது சீமைக்காரை கட்டுமானமாகும்.

இந்து மதத்தில் முக்கியத்துவம்
தொகுதுளசி அல்லது புனித துளசி என்பது இலமியேசியே குடும்பத்தில் உள்ள ஒரு நறுமண தாவரமாகும். இது பழைய உலக வெப்பமண்டலங்கள் முழுவதிலும் பூர்வீகமாக உள்ளது. மேலும், பயிரிடப்பட்ட தாவரமாகவும் தப்பித்த களையாகவும் பரவலாக உள்ளது. இது இந்துக்களால் புனிதமான தாவரமாகக் கருதப்பட்டு, பிருந்தா தேவி அல்லது விருந்தாபதி என்று வணங்கப்படுகிறது. தினமும் காலையில் குளித்த பின் ஒடியா மக்கள் செடிக்கு தண்ணீர் ஊற்றி வணங்கி, சில இலைகளை பிரசாதமாக எடுத்துக் கொள்கின்றனர். துளசி இந்துக்களுக்கு ஒரு புனிதமான செடியாகும். துளசி இதழ்கள் கலந்த நீரானது இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்ப கொடுக்கப்படுகிறது.[1] பான சங்கராந்தியில் ஒரு சிறிய மண் பானையில் வெல்ல பானம், பால், வில்வப் பழம், மசாலாப் பொருட்கள் ஆகியவற்றால் நிரப்பி ஒரு குச்சியில் தொங்கவிடுவார்கள். இதனால் நீர் துளிகள் துளசியின் வேர்களில் விழுகின்றன. இது மழைக்காலமான ஆடி மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அந்த நாளில் வெல்லம், தயிர் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.[2]
துளசி விவாகம்
தொகுதுளசி விவாகம் எனப்படும் ஒரு சடங்கு இந்துக்களால் பிரபோதினி ஏகாதசி (கார்த்திகை வளர்பிறை சந்திரனின் பதினொன்றாவது நாள்) முதல் கார்த்திகை பூர்ணிமா (கார்த்திகையில் முழு நிலவு) வரை வழக்கமாக செய்யப்படுகிறது. இது துளசி செடியை விஷ்ணுவிற்கும், அவரது உருவமான, சாளக்கிராமம் அல்லது கிருட்டிணன் அல்லது இராமர் உருவத்துடன் நடக்கும் சம்பிரதாய திருமணமாகும். மணமகன், மணமகன் இருவருக்கும் சடங்கு முறைப்படி வழிபாடு செய்யப்பட்டு, பாரம்பரிய இந்துத் திருமணச் சடங்குகளின்படி திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இது பருவமழைக்கு ஒத்திருக்கிறது. திருமணங்களுக்கும் பிற சடங்குகளுக்கும் சாதகமற்றதாகக் கருதப்படும் சாதுர்மாதத்தில் நிகழ்த்தப்படுகிறது. எனவே இந்த நாள் இந்தியாவில் வருடாந்திர திருமண பருவத்தில் தொடங்குகிறது.[3]
புகைப்படங்கள்
தொகு-
கேரளாவில் துளசி பிருந்தாவனம் ; மலையாளத்தில் "துளசித்தரம்" என்று அழைக்கப்படுகிறது.
-
ஒரு தெலுங்கு வீட்டில் துளசி பிருந்தாவனம் அல்லது துளசி கோட்டா
-
கேரளாவில் துளசி பிருந்தாவனம்
-
மேற்கு வங்காளத்தில் உள்ள ராதாமாதாப் கோயிலில் துளசி மஞ்சா
-
ஒரு கிராமத்து வீட்டில் துளசி பிருந்தாவனம்.
-
1970களில் மகாராட்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் துளசிக்கு தண்ணீர் ஊற்றுகிறார்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Why do we consider Tulsi sacred?". Hindunet.org. Archived from the original on 2004-11-11. Retrieved 2015-04-16.
- ↑ Rajendran, Abhilash (2007-06-06). "Maha Vishuba Sankranti – Orissa New Year ~ Hindu Blog". Hindu-blog.com. Retrieved 2015-04-16.
- ↑ "Tulsi Vivah". Sanatan Sanstha (in அமெரிக்க ஆங்கிலம்). 2000-10-18. Retrieved 2021-06-30.