தூயத்தாரா

தொகு

உடலமைப்பு

தொகு

தூயத்தாரா(Tuatara) பார்ப்பதற்கு ஓணானைப் போலவே இருக்கும். ஆனால் இது சுமார் அரை மீட்டர் நீளமுள்ளது. இது சாம்பல் கலந்த கருமை நிறத்தில் சில மஞ்சள் புள்ளிகளுடன் காணப்படும். தலை முதல் வால் நுனிவரை செதில்கள் இருக்கும்.

வரலாறு

தொகு

தூயத்தாரா நியூசிலாந்தில் மட்டுமே வாழ்கின்றது. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஊர்ந்து செல்லும் உயிரினங்களில் பல மிகமிகப் பெரியதாக இருந்தன. காலப்போக்கில் அடுத்தடுத்து மறிவந்த தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப அவை வாழமுடியாமல் மறைந்துவிட்டன. அந்த ஆதிகால இனங்களுல் இன்று எஞ்சியிருப்பது தூயத்தாரா ஒன்றுதான்.

வாழ்க்கை

தொகு

தூயத்தாரா பகல் முழுவதும் தான் தோண்டிய குழி அல்லது வளையிலேயே தங்கியிருக்கும். இரவில்தான் இரைதேடச் செல்லும். தூயத்தாரா நன்கு நீந்தக் கூடியது. தண்ணீருக்கடியில் இது பல மணி நேரம் இருக்க முடியும்.

உணவுப்பழக்கம்

தொகு

மண்புழு, பூச்சி, நண்டு முதலியவற்றை இது உண்ணும். எலி, தவளை போன்றவற்றையும் இது உண்பதுண்டு.

இனப்பெருக்கம்

தொகு

பெண் தூயத்தாரா 8 அல்லது 10 முட்டைகள் இடும். பொரிப்பதற்குக் குறைந்தது 12 மாதங்கள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1986, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூயத்தாரா&oldid=3610937" இலிருந்து மீள்விக்கப்பட்டது