வியாகுல அன்னை

(தூய மரியாவின் துயரங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வியாகுல அன்னை என்பது கன்னி மரியாவுக்கு அளிக்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். மரியா தன் வாழ்வில் பட்ட துயரங்களின் நினைவாக இப்பெயர் வழங்கப்படுகின்றது. வியாகுல அன்னையாக கத்தோலிக்க கலையில் மரியா அதிகம் சித்தரிக்கப்படுகிறார்.

வியாகுல அன்னை
வியாகுல அன்னை, திருச்சிலுவை ஆலயம், சலமன்கா.
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
திருவிழா15 செப்டம்பர்
பாதுகாவல்போலந்து, சிலோவாக்கியா, மால்ட்டா, மிசிசிப்பி, Ronda, Cebu, Tanawan Bustos, Bulacan

மரியாவின் ஏழு வியாகுலங்களை தியானிக்கும் பழக்கம் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளது. பொதுவாக கத்தோலிக்க கலையில் வியாகுல அன்னையை துயரத்துடனும், கண்ணீருடனும் காட்சிப்படுத்துவர். ஏழு வாள் அவரது இதயத்தை ஊடுருவி இரத்தம் கொட்டுவது போலவும் சித்தரிப்பது வழக்கம். சிமியோனின் இறைவாக்கின் அடிப்படையில் இப்பக்தி முயற்சி துவங்கியது. வியாகுல அன்னை ஜெபமாலை, வியாகுல அன்னை மன்றாட்டுமாலை முதலியன இப்பத்திமுயற்சிகளில் அடங்கும்.

தூய மரியாவின் துயரங்கள் என்னும் பெயரில் மரியாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் 15 செப்டம்பரில் விழா எடுக்கப்படுகின்றது.

மரியாவின் ஏழு துயரங்கள்

தொகு

இவை துயர மறைபொருள்களிலிருந்து வேறுபட்டதாகும்.

  1. எருசலேமில் சிமியோன் மரியாவை நோக்கிச் சொன்ன இறைவாக்கு. (லூக் 2:34–35)
  2. குழந்தையைக் காப்பாற்ற எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல். (மத் 2:13)
  3. எருசலேமில் மூன்று நாள் சிறுவன் இயேசு காணாமல் போதல். (லூக் 2:43–45)
  4. துன்பப் பாதையில் இயேசு சிலுவை சுமந்து செல்லும்போது அவரை சந்தித்தல்.
  5. கல்வாரியில் இயேசு சிலுவை அறையப்பட்டு இறத்தல். (யோவா 19:25)
  6. இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல். (Matthew 27:57–59)
  7. அரிமத்தியா யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தல். (யோவா 19:40–42)

இவை ஒவ்வொன்றின் நினைவாக தினமும் ஒரு கிறிஸ்து கற்பித்த செபம் மற்றும் ஏழு கிறிஸ்து கற்பித்த செபம் செபிப்பது கத்தோலிக்கரிடையே வழக்கமாகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாகுல_அன்னை&oldid=4041054" இலிருந்து மீள்விக்கப்பட்டது