தூல்பேட்டை

தூல்பேட்டை ( Dhoolpet ) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்திலுள்ள பழைய நகரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஐதராபாத் நிசாம்களின் ஆட்சியின் போது உத்தரபிரதேசத்திலிருந்து குடிபெயர்ந்த மக்கள் இந்த இடத்தில் வசிக்கின்றனர். இந்த மக்கள் இந்த பகுதியில் குடியேற நிசாம்கள் உதவினர்.

தூல்பேட்டை
Inner city
தூல்பேட்டை is located in தெலங்காணா
தூல்பேட்டை
தூல்பேட்டை
தெலங்காணாவில் தூல்பேட்டையின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°22′28″N 78°27′39″E / 17.37444°N 78.46083°E / 17.37444; 78.46083
நாடு India
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
மெற்றோஐதராபாத்து
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்500 006
மக்களவைத் தொகுதிஐதராபாத்து
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகோஷா மகால்
திட்டமிடல் நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம்

பின்னணி தொகு

விநாயக சதுர்த்தி திருவிழாவிற்காக தயாரிக்கப்படும் பிள்ளையார் சிலைகளுக்கு இது பிரபலமானது. இந்த சந்தையிலிருந்து வாங்க மாநிலம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இங்குள்ள பலர் சிலை தயாரித்தல் போன்ற பருவகால வணிகங்களை நடத்துகிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க ஜும்மரத் சந்தை (அதாவது வியாழன் சந்தை) [1] என்பது ஒவ்வொரு வியாழக்கிழமை இங்கு நடைபெறுகிறது. [2] இங்கு விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் திருடப்பட்டவை.

போக்குவரத்து தொகு

அப்சல் குஞ்ச் அருகே அமைந்துள்ள தூல்பேட்டை, தெலங்காணா மாநிலப் போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளால் (அப்சல்குஞ்சிலிருந்து எண் 80, சிக்கந்தராபாத்திலிருந்து எண் 2 ஜே) மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள எம்.எம்.டி.எஸ் தொடர் வண்டி நிலையம் நம்பள்ளி நிலையமாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Hyd: 45 held in crackdown on illegal liquor manufacturing". 13 October 2014 – via Business Standard.
  2. "Hyderabad's old faithfuls". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூல்பேட்டை&oldid=3146389" இலிருந்து மீள்விக்கப்பட்டது