தூ. கணபதி

இந்திய அரசியல்வாதி

தூ. கணபதி (Ganapathy, T) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1952 தேர்தலில் பழவூர் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு இவர் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருச்செந்தூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலிருந்து 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

கணபதி 1964-ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர். 1971 தேர்தலில் நாங்குனேரி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூ._கணபதி&oldid=3538168" இலிருந்து மீள்விக்கப்பட்டது