தெக்கலூர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

தெக்கலூர் (Thekkalur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.[1]

தெக்கலூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
641654

அமைவிடம்

தொகு

இந்த ஊர் வட்டத் தலைநகரான அவினாசியிலிருந்து 8 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைநகரான திருப்பூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், சென்னையில்ரிருந்து 450 கிலோமீட்டர் தோலைவிலும் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை 544-ல் அமைந்துள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது தெக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெக்கலூர் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 64476 ஆகும். கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 2141.91 ஹெக்டேர் ஆகும். தெக்கலூர் கிராமத்தில் சுமார் 3,031 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 12,688 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 6612 (52.1 % ) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 6076 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 71.4 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

பிற தகவல்கள்

தொகு

தெக்கலூர் கிராமத்தில் விவசாயம் என்பது பிரதானமாக இருந்தது ஆனால் தற்போது இது முன்னணி ஜவுளி உற்பத்தி மற்றும் விசைத்தறி மையமாக உள்ளது. இங்கு பல Tshirt ஜவுளி தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கனரா வங்கி, இ-சேவை மையம், கூட்டுறவு சங்கம், அஞ்சல் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், துணை சுகாதார நிலையம் போன்ற அனைத்தும் இந்த ஊரின் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் மிக அருகில் உள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. "Thekkalur Village in Avanashi (Tiruppur) Tamil Nadu - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
  2. "Thekkalur Village , Avanashi Block , Tiruppur District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெக்கலூர்&oldid=3799014" இலிருந்து மீள்விக்கப்பட்டது