கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (IATA: CJB, ICAO: VOCB) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம். இது முன்பு பீளமேடு விமான நிலையம் அல்லது கோயம்புத்தூர் குடிசார் விமான நிலையம் என அழைக்கப்பட்டது. இந்த வானூர்தி நிலையமானது நகரின் மையப்பகுதியிலிருந்து ஏறத்தாழ 10 km (6.2 mi) தொலைவில் பீளமேட்டில் அமைந்துள்ளது. இது பயணியர் மற்றும் வானூர்தி போக்குவரத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையத்திலிருந்து ஒன்பது உள்நாட்டு மற்றும் இரண்டு சர்வதேச நகரங்களுக்கு நேரடி வானூர்தி சேவை உள்ளது.
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | கோயம்புத்தூர் | ||||||||||
அமைவிடம் | பீளமேடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா | ||||||||||
நேர வலயம் | IST (+5:30) | ||||||||||
உயரம் AMSL | 400 m / 1,311[1] ft | ||||||||||
ஆள்கூறுகள் | 11°01′48″N 077°02′36″E / 11.03000°N 77.04333°E | ||||||||||
இணையத்தளம் | கோயம்புத்தூர் வானூர்தி நிலையம் | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 - மார்ச் 2019) | |||||||||||
| |||||||||||
வரலாறு
தொகுஇந்த வானூர்தி நிலையம் 1940 இல் நிறுவப்பட்டது.[5]1948 இல், ஏர் இந்தியா சென்னை-பெங்களூரு-கோவை-கொச்சி-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வாரத்திற்கு ஆறு முறை வானூர்தி சேவைகளை இயக்கியது.[6][7] கோயம்புத்தூர் பறக்கும் சங்கம் மற்றும் வானூர்தி பயிற்சிப் பள்ளி 1960 இல் நிறுவப்பட்டது.[8][9][10] பீளமேடு வானூர்தித்தளம் என்று அழைக்கப்பட்ட இது 1960 களில் சீரமைப்பு மற்றும் விரிவாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது.[11]1987 ஆம் ஆண்டில், பெரிய வானூர்திகளைக் கையாளும் வகையில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட்டது.[5] 1990 இல், இரவில் தரையிறங்கும் வசதிகள் உருவாக்கப்பட்டன.[12] 6 சூன் 2012 அன்று, இந்திய அரசு வானூர்தி நிலையத்தை பன்னாட்டு வானூர்தி நிலையமாக மேம்படுத்தும் நோக்கத்தை அறிவித்தது. இந்திய அமைச்சரவை 2 அக்டோபர் 2012 அன்று இதை பன்னாட்டு வானூர்தி நிலையமாக அறிவித்தது.[13][14]
உள்கட்டமைப்பு
தொகுஇந்த வானூர்தி நிலையத்தில் ஒரு ஓடுபாதை உள்ளது, இது 2008 இல் 2,990 m (9,810 அடி) நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டது.[15] 2008 ஆம் ஆண்டில், 50cro செலவில் ஒன்பது வானூர்தி நிறுத்தும் இடங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது.[16][17]2010 இல், ஏற்கனவே இருக்கும் பொதுவான முனையத்தில் புதிய உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரிவுகள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 300 மகிழுந்துக்களை நிறுத்தும் திறன் கொண்ட மேலாண்மை அமைப்பு உள்ளது.[18]
2019 ஆம் ஆண்டில், இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் வானூர்தி நிலையத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு புதிய உள்நாட்டு புறப்பாடு முனையக் கட்டிடத்தையும், ஒரு புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கட்டுப்பாடுக் கோபுரம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தையும் கட்ட முன்மொழிந்தது. புதிய முனையம் ஏறத்தாழ 11,870 sq ft (1,103 m2) பரப்பளவில் கட்டப்படும், இதன் மொத்த மதிப்பீடு சுமார் 50cro ஆகும்.[19] புதிய கட்டிடம் கட்டப்பட்டபின், ஆண்டுக்கு முப்பது இலட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டிருக்கும்.[20]
வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்
தொகுபயணியர் சேவை
தொகுவிமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் அரேபியா | சார்ஜா |
ஏர் இந்தியா | தில்லி, மும்பை |
இன்டிகோ | அகமதாபாத், ஐதராபாத்து, கொல்கத்தா, கோவா-மோப்பா, தில்லி, பூனா, மும்பை, சென்னை, பெங்களூர் |
ஸ்கூட் ஏர் | சிங்கப்பூர் |
விஸ்தாரா | தில்லி, மும்பை |
சரக்கு
தொகுவிமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
அமேசான் ஏர் | பெங்களூர்[21] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Coimbatore Airport". airportsindia.in. Archived from the original on 8 July 2015. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015.
- ↑ Annexure III – Passenger Data (PDF) (Report). Airports Authority of India. பார்க்கப்பட்ட நாள் 22 April 2024.
- ↑ Annexure II – Aircraft Movement Data (PDF) (Report). Airports Authority of India. பார்க்கப்பட்ட நாள் 22 April 2024.
- ↑ Annexure IV – Freight Movement Data (PDF) (Report). Airports Authority of India. பார்க்கப்பட்ட நாள் 22 April 2024.
- ↑ 5.0 5.1 In the matter of Determination of Aeronautical Tariffs in respect of Coimbatore Airport (PDF) (Report). Airports Economic Regulatory Authority of India. 2019. p. 4. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
- ↑ World Aviation Annual Report. Aviation Research Institute, Washington D.C. 1948. p. 512.
- ↑ Jane's All the World's Aircraft. Vol. 42. Sampson Low, Marston & Company. 1951.
- ↑ Parliamentary Debates:Official Report (Report). Vol. 207. Parliament of India. 2006. p. 80.
- ↑ Indian Armed Forces Year Book. University of California. 1974. p. 414.
- ↑ U.S. Army Area Handbook for India. Special Operations Research Office, United States Army. 1964. p. 646.
- ↑ Aeroplane and Commercial Aviation News. Vol. 108. 1963. p. 9.
- ↑ Airports International. IPC Transport Press. 1990. p. 6.
- ↑ "Prime Minister holds infrastructure meet, but Mukul Roy is missing". NDTV. 6 June 2012. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
Prime Minister said this year will see a series of new projects being commissioned, including international airports for Lucknow, Varanasi, Coimbatore, Trichy and Gaya
- ↑ "Cabinet grants international airport status to five airports". The Economic Times. New Delhi. 4 October 2012. பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.
- ↑ "Extended runway ready at Coimbatore Airport". The Hindu. 20 April 2008. Archived from the original on 23 April 2008. பார்க்கப்பட்ட நாள் 17 March 2016.
- ↑ "New aprons being built at Coimbatore airport". The Hindu. 21 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
- ↑ "Coimbatore airport to get a new look". The Hindu. 29 October 2007. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
- ↑ "New parking system at Coimbatore Airport". The Hindu. Chennai, India. 1 April 2011. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
- ↑ "New building for domestic departure to come up at city airport". The Times of India. 8 June 2019.
- ↑ Pre-feasibility report for the expansion of Coimbatore Airport (Report). Airports Authority of India. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
- ↑ "Amazon Air takes off in India". Amazon (in அமெரிக்க ஆங்கிலம்). 23 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 February 2023.