விஸ்தாரா (Vistara) புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அச்சுமையமாகக் கொண்டு இயங்கும் இந்திய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும்.இந்நிறுவனம் தனது முதல் விமான சேவையை புது தில்லியிலிருந்து மும்பைக்கு சனவரி 9,2015 ல் இயக்கியது .[1] 3 ஏர்பஸ் ஏ320 வானூர்திகளைக் கொண்டு தினசரி 14 பறப்புக்களை இயக்குகின்றது.                                               

விஸ்தாரா
IATA ICAO அழைப்புக் குறியீடு
UK VTI VISTARA
நிறுவல்2014
மையங்கள்இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்விசுத்தாரா கழகம்
வானூர்தி எண்ணிக்கை45
சேரிடங்கள்34
தாய் நிறுவனம்டாடா சன்சு(51%)
சிங்கப்பூர் வான்வழி(49%)
தலைமையிடம்நிலை 10,தொடுவான மையம் ஒன்று,கால்ப் கோர்ஸ் சாலை,குர்கான், இந்தியா
முக்கிய நபர்கள்பாஸ்கர் பாட் (தலைவர்)
லெஸ்லி தங் முசெஅ
வலைத்தளம்www.airvistara.com

                                                                    விஸ்தாரா வானூர்தி நிறுவனம் ஓர் கூட்டு முயற்சி நிறுவனமாக இந்தியாவின் டாடா குழமம் மற்றும் சிங்கப்பூர் வான்வழி நிறுவனத்தால் 2013 ல் நிறுவப்ப ட்டது.இந்திய உள்நாட்டு விமான சேவைகளில் அதிகம் உள்ள குறைந்த கட்டண சேவைகளை இந்நிறுவனமும் தனது தரமான விமான சேவை,உணவு வழங்குதல் மற்றும் தொழில்முறை விமான பயணிகளுக்கு வழங்கி வருகிறது. ‌                                         

வரலாறு

தொகு

இந்தக் கூட்டு நிறுவனத்திற்கு இந்திய வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அக்டோபர் 2013 ல் தனது ஒப்புதலை வழங்கியது,விஸ்தாரா வானூர்தி நிறுவனம் புது தில்லியை தலைமை யிடமாக கொண்டதாகும்.டாடா குழுமம் 51 விழுக்காடும் சிங்கப்பூர் வான்வழி நிறுவனம் 49 விழுக்காடும் கொண்டு ள்ளன.இந்நிறுவனங்கள் இரண்டும் ஆரம்ப முதலீடாக $100 மில்லியன் முதலீடு செய்துள்ளன.இந்நிறுவனம் தனது வர்த்தக அடையாளமாக "விஸ்தாரா" என்கின்ற பெயரை 11 ஆகஸ்ட் 2014 ல் வெளியிட்டது, இச்சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்ததாகும் இதன் பொருள் "வரம்பற்ற விரிவாக்கம்" என்பதாகும்.

                                   விஸ்தாரா விமான நிறுவனம் மும்பையின் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் புதிய முனையம் 2 ல் பொருட்களை எடுத்து செல்லும் முதல் உள்நாட்டு விமான நிறுவனமாகும் மேலும் இந்நிறுவனம் 15 அக்டோபர் 2015 ல் விமான போக்குவரத்து பாதுகாப்பு பயிற்சி மையத்தை தொடங்கியது,இந்த பயிற்சி மையத்தில் இதன் விமான அறை குழுவினர்,பாதுகாப்பு ஊழியர்கள்,ஏனைய ஊழியர்கள் மற்றும் விமான தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறது.விஸ்தார விமான நிறுவனம் சமீீீபத்தில் பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கதின்(IATA) உறுப்பினர் ஆகியுள்ளது,இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் சர்வதேச அளவில் 280 விமான நிறுவனஙகளில் ஒன்றாக இனைந்துள்ளது மேலும் ஐஏடிஏ(IATA)வின் உறுப்பினர் சேர்க்கையை பெற்றுள்ள இந்திய விமான நிறுவனஙகளில் இந்நிறுவனமும் ஒன்றாகும்.

விஸ்தார விமான நிறுவனம் தனது முதல் பரந்த உடல் விமானத்தை 29 பிப்ரவரி 2020 அன்று போயிங்கிடமிருந்து (787-9) பெற்றுக் கொண்டது,இந்த வகை விமானத்தை இயக்கும் முதல் இந்திய நிறுவனமாக இது உள்ளது இன்னும் ஐந்து (போயிங் 787-9) விமானங்கள் வரவுள்ளது.


சேரிடங்கள்

தொகு
மாநிலம் நகரம் ஐஏடிஏ ஐசிஏஓ வானூர்தி நிலையம்
மகாராட்டிரம் மும்பை BOM VABB சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
தில்லி புது தில்லி DEL VIDP இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (அச்சுமையம்)
குசராத்து அகமதாபாத் AMD VAAH சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
தமிழ்நாடு சென்னை MAA VOMM அறிஞர் அண்ணா பன்னாட்டு விமானநிலையம்

விஸ்தாரா திசம்பர் 19, 2014 முதல் தனது முன்பதிவுகளைத் தொடங்கியது; முதல் வணிகமுறைப் பறப்பு தில்லியிலிருந்து மும்பைக்கு சனவரி 9, 2015இல் 2014 அன்று பறந்தது. தனது முதல் ஆண்டு இயக்கத்தில் புது தில்லியை தனது அச்சுமையமாகக் கொண்டு தில்லியிலிருந்து மும்பை, கோவா, சண்டிகர், பெங்களூர், ஐதராபாத்து, அகமதாபாத், சம்மு, சிறிநகர், பட்னா நகரங்களுக்கு வாரத்திற்கு 87 பறப்புகள் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது.[2] இரண்டாமாண்டில் சென்னை, இலக்னோ, புனே, வாரணாசி, கொல்கத்தா, குவஹாத்தி நகரங்களையும் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்ரித்சர், இந்தோர், கொச்சி நகரங்களையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. தவிரவும் கூடுதல் அச்சுமையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.[3]

மேலும் விஸ்தாரா தில்லி-இலண்டன், மதுரை-சிங்கப்பூர், புனே-சிங்கப்பூர், தில்லி-யோகானாசுபெர்கு, தில்லி-கேப் டவுண், தில்லி-அதிசு அபாபாபன்னாட்டு வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டுள்ளது.[4]

குறிப்பங்கீடு உடன்படிக்கைகள்

தொகு

விஸ்தாரா கீழ்வரும் வான்போக்குவரத்து நிறுவனங்களுடன் குறிப்பங்கீடு உடன்பாடு கண்டுள்ளது:

வானூர்தித் தொகுதி

தொகு
 
தில்லி இந்திராகாந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் விஸ்தாராவின் முதல் வானூர்தி VT-TTB
விஸ்தாரா வண்டித்தொகுதி
வானூர்தி சேவையில் வாங்கல் பயணிகள் குறிப்புகள்
J PY Y மொத்தம்
ஏர்பஸ் ஏ320-232 13 - 8 24 126 158 மற்றவை மார்ச் 2016இல் சேர்க்கப்படும்.[6]
ஏர்பஸ் ஏ320நியோ 21 39[7] 8 24 126 158
ஏர்பஸ் ஏ321நியோ 2 4[8] 12 24 152 188
போயிங் 737-800 7 12 156 168 இது முன்னாடி ஜெட் ஏர்வேஸ் வானூர்திகள்[9]
போயிங் 787-9 2 4[10] 30 21 248 299
மொத்தம் 45 47

விஸ்தாரா தனது முதல் A320 வானூர்தியை செப்டம்பர் 23, 2014 அன்று ஏற்றுக்கொண்டது;[11] புதுதில்லிக்கு செப்டம்பர் 25, 2014 அன்று இது வந்து சேர்ந்தது.[12] விஸ்தாரா தனது ஐந்தாம் ஆண்டுக்கு முன்னதாக வண்டித்தொகுதியை 20 வானூர்திகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. வாடகைக்கான வானூர்திகளை சிங்கப்பூரைச் சேர்ந்த பிஓசி ஏவியேசனிடமிருந்து பெற்றுள்ளது. [2]

மேற்சான்றுகள்

தொகு
  1. "Vistara takes to the skies, operates first flight from Delhi to Mumbai". தி எகனாமிக் டைம்ஸ். 9 January 2015. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. 2.0 2.1 "Vistara's plan is flying". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். 13 August 2014. பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.
  3. "Indian full-service carrier Vistara commences operations". Ch-Aviation. 11 January 2015. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
  4. [1]
  5. 5.0 5.1 P.R. Sanjai (22 December 2014). "Vistara signs inter-line agreement with Singapore Airlines, SilkAir". மின்ட். பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  6. "BOC Aviation to deliver all 13 planes to Vistara by March 2016". 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
  7. "India's Vistara explores options to gain London slots". ch-aviation.com. 13 January 2020.
  8. "India's Vistara to add maiden A321neo in 2020" (in en). ch-aviation. https://www.ch-aviation.com/portal/news/73268-indias-vistara-to-add-maiden-a321neo-in-2020. 
  9. "Vistara leases six planes from BOC Aviation for local expansion". Reuters. 24 May 2019. https://in.reuters.com/article/india-vistara-aircraft-idINKCN1SU15R. 
  10. Aditi Shah, Jamie Freed (2018-07-11). "Vistara orders Boeing, Airbus jets worth $3.1 billion in growth plan". in.reuters.com. https://in.reuters.com/article/vistara-orders-boeing-airbus/vistara-orders-boeing-airbus-jets-worth-31-billion-in-growth-plan-idINKBN1K10JL. பார்த்த நாள்: 2018-07-12. 
  11. http://xfw-spotter.blogspot.com/2014/07/a320-232sl-tata-sia-airlines-f-wwdt-vt.html
  12. "Vistara takes delivery of first Airbus A320 aircraft in Delhi". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 25 September 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்தாரா&oldid=3062228" இலிருந்து மீள்விக்கப்பட்டது