தெசலி

கிரேக்கத்தின் நிர்வாக பிராந்தியம்

தெசலி (Thessaly, கிரேக்கம்: Θεσσαλία‎ , [θesaˈli.a] ; பண்டைய தெசலியன் : Πετθαλία , Petthalía ) என்பது கிரேக்கத்தின் பாரம்பரிய புவியியல் பகுதியும், நவீன நிர்வாகப் பகுதியும் ஆகும். இது இதே பெயரில் அழைக்கப்பட்ட பெரும்பாலான பண்டைய பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. கிரேக்க இருண்ட காலத்துக்கு முன்பு, தெசலி அயோலியா என்று அழைக்கப்பட்டது ( பண்டைக் கிரேக்கம்Αἰολία , Aiolía ), ஓமரின் ஒடிசியில் இவ்வாறு குறிப்பிடபட்டது.

தெசலி
Θεσσαλία (கிரேக்கம்)
  • கிரேக்கத்தின் நிர்வாகப் பகுதி
  • கிரேக்கத்தின் பாரம்பரிய பகுதி
கிரேக்கத்தில் தெசலியின் அமைவிடம்
கிரேக்கத்தில் தெசலியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 39°36′N 22°12′E / 39.6°N 22.2°E / 39.6; 22.2
நாடு கிரேக்க நாடு
பரவலாக்கப்பட்ட நிர்வாகம்தெசலி மற்றும் மத்திய கிரேக்கம்
Cession1881
தலைநகரம்லாரிசா
துறைமுக நகரம்வோலோஸ்
பிராந்திய அலகுகள்
பட்டியல்
அரசு
 • பிராந்திய ஆளுநர்Konstantinos Agorastos [el] (New Democracy)
பரப்பளவு
 • மொத்தம்14,036.64 km2 (5,419.58 sq mi)
மக்கள்தொகை (2021)[1]
 • மொத்தம்6,87,527
 • அடர்த்தி49/km2 (130/sq mi)
இனங்கள்Thessalian
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுGR-E
HDI (2019)0.868[2]
very high · 7th of 13
இணையதளம்www.pthes.gov.gr

உதுமானிய ஆட்சியின் பிடியில் இருந்த நான்கரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1881 இல் தெசலி நவீன கிரேக்க அரசின் ஒரு பகுதியாக மாறியது . 1987 முதல் இது நாட்டின் 13 பிராந்தியங்களில் ஒன்றாக உருவானது. [3] மேலும் இது (2011 இன் கல்லிக்ராடிஸ் சீர்திருத்தத்திற்கு பிறகு ) ஐந்து பிராந்திய அலகுகள், 25 நகராட்சிகள் என உட்பிரிவுகள் கொண்டதாக ஆனது. இந்த நிர்வாக பிராந்தியத்தின் தலைநகரம் லாரிசா ஆகும். தெசலி வடக்கு கிரேக்கத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் மாசிடோனியா, மேற்கில் எபிரஸ், தெற்கில் மத்திய கிரீஸ் கிழக்கில் ஏஜியன் கடல் ஆகியவை உள்ளன. தெசலி நிர்வாகப் பகுதியில் ஸ்போரேட்ஸ் தீவுகளும் அடங்கும்.

குறிப்புகள் தொகு

  1. Hellenic Statistical Authority(2022-07-19). "Census 2021 GR". செய்திக் குறிப்பு.
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). Retrieved 2021-07-20.
  3. Π.Δ. (March 6, 1987). Καθορισμός των Περιφερειών της Χώρας για το σχεδιασμό κ.λ.π. της Περιφερειακής Ανάπτυξης. ΦΕΚ. பக். 51/87. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெசலி&oldid=3604779" இலிருந்து மீள்விக்கப்பட்டது