தெம்மினிக் தேன்சிட்டு

தெம்மினிக் தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. தெம்மினிக்கி
இருசொற் பெயரீடு
ஏதோபைகா தெம்மினிக்கி
முல்லர், 1843

தெம்மினிக் தேன்சிட்டு (Temminck's sunbird)(ஏதோபைகா தெம்மினிக்கி) என்பது தேன்சிட்டு பறவை சிற்றினமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் சுமார் 1800 மீ உயரம் வரை காணப்படுகிறது. இத்தேன்சிட்டு போர்னியோ, சுமாத்திரா, மலேசியா மற்றும் தென்மேற்கு தாய்லாந்தில் வெப்பமண்டல ஈரமான மலைக்காடுகளில் காணப்படுகிறது.

இந்த பறவையின் பொதுவான பெயர் மற்றும் இலத்தீன் இருசொல் டச்சு பிரபு மற்றும் விலங்கியல் வல்லுநரான கோயன்ராட் ஜேக்கப் தெம்மினிக்கை நினைவுபடுத்துகிறது.[2]

பெண் - தோய் ஆங் காங் மலை - தாய்லாந்து.

இது சாவகம் தேன்சிட்டு, ஏத்தோபிகா மிசுடகாலிசு துணையினமாகக் கருதப்படுகிறது.

தெம்மினிக்கின் தேன்சிட்டின் உடல் நீளமானது பெண் பறவையில் 10 செ.மீட்டராகவும் ஆண் பறவையில் 12.5 செ.மீட்டராகவும் உள்ளது. கருஞ்சிவப்பு நிறத்தில் நீண்ட வாலும், சாம்பல் நிற வயிறும், பின்புறம் மற்றும் வால் இடையே மஞ்சள் மற்றும் ஊதா பட்டைகளும் தலையில் அலகிலிருந்து வெளிப்படும் நான்கு ஊதா பட்டைகளும் காணப்படுகின்றன. இறக்கை மற்றும் வால் இறகுகள் செம்பழுப்பு விளிம்புகளைக் கொண்டுள்ளது. பெண் பறவையில் இது ஐரோப்பிய இடலை நிறத்தில் கவர்ச்சியின்றி காணப்படும். வால் இறகுகள் செம்பழுப்பு விளிம்புகளுடன் காணப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Aethopyga temminckii". IUCN Red List of Threatened Species 2016: e.T103804369A104300960. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103804369A104300960.en. https://www.iucnredlist.org/species/103804369/104300960. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. pp. 335–336.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெம்மினிக்_தேன்சிட்டு&oldid=3583324" இலிருந்து மீள்விக்கப்பட்டது