தெய்வத்தாய்

1964 ஆவது ஆண்டில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம்

தெய்வத்தாய் (Deiva Thai) 1964 ஆவது ஆண்டில் எம். ஜி. இராமச்சந்திரன் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கிய இப்படத்திற்கு விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். 1964 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம், அவ்வாண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

தெய்வத்தாய்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா மூவிஸ்
மூலக்கதைநந்திதா பாத்
திரைக்கதைஆர். எம். வீரப்பன்
டி. என். பாலு
கே. பாலச்சந்தர் (வசனம்)
இசைவிசுவநாதன் -இராமமூர்த்தி
நடிப்பும. கோ. இராமச்சந்திரன்
சரோஜா தேவி
பண்டரி பாய்
கலையகம்சத்யா மூவிஸ்
விநியோகம்சத்யா மூவிஸ்
வெளியீடு18 சூலை 1964
ஓட்டம்175 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மறுஆக்கம்தொகு

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கில் என். டி. ராமராவ் நடிப்பில் சி. ஐ. டி. என்ற பெயரில் 1965 ஆவது ஆண்டில் வெளியானது.

நடிகர்கள்தொகு

நடிகர் ஏற்ற வேடம்
எம். ஜி. இராமச்சந்திரன் மாறன், சிபிஐ அதிகாரி
சரோஜா தேவி - மேகலா
எம். என். நம்பியார் - மதன்
எஸ். ஏ. அசோகன் - கருணாகரன்
எஸ். வி. சகஸ்ரநாமம் - டி. ஏ. ஜி. மோகன்
நாகேஷ் - வித்வான் சற்குணம்
பண்டரி பாய் - சிவகாமி
எசு. என். இலட்சுமி - மேகலாவின் பாட்டி

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[1][2]

பாடல் பாடகர்(கள்) வரிகள்
"காதலிக்காதே கவலைப்படாதே" பி. சுசீலா வாலி 04:02
"பருவம் போன பாதையிலே" பி. சுசீலா 04:32
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" டி. எம். சௌந்தரராஜன் 03:08
"இந்த புன்னகை என்ன விலை" டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 05:14
"வண்ணக்கிளி சொன்ன மொழி" டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 03:40
"ஒரு பெண்ணைப் பார்த்து" டி. எம். சௌந்தரராஜன் 04:37
"உண்மைக்கு வேலியிட்டு" சீர்காழி கோவிந்தராஜன் ஆலங்குடி சோமு 04:37

மேற்கோள்கள்தொகு

  1. "Deiva Thai (1964)". Raaga.com. 30 June 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Deiva Thai ( EP , 45 RPM )". AVDigital. 16 November 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 November 2021 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணைதொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வத்தாய்&oldid=3646238" இருந்து மீள்விக்கப்பட்டது