அவிலாவின் புனித தெரேசா

உரோமன் கத்தோலிக்க துறவி (1515-1582)
(தெரேசா (அவிலா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அவிலாவின் புனித தெரேசா (Saint Teresa of Ávila, அல்லது Saint Teresa of Jesus, மார்ச் 28, 1515 - அக்டோபர் 4, 1582) உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். எசுப்பானியா நாட்டினரான இவர் கார்மேல் சபைத் துறவி ஆவார். இவர் ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். சிலுவையின் புனித யோவானோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்கினார். இவரின் ஆழ் நிலைத் தியானம் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுனர்களுள் ஒருவர். இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண் எனும் பெருமை இவரை சேரும்.

அவிலாவின் புனித தெரேசா
Saint Teresa of Ávila
அவிலாவின் புனித தெரேசா
கன்னியர், மறைவல்லுநர்
பிறப்பு(1515-03-28)மார்ச்சு 28, 1515
கோடரெண்டுரா, அவிலா, எசுப்பானியா
இறப்புஅக்டோபர் 4, 1582(1582-10-04) (அகவை 67)[1]
அல்பா தே தொர்மஸ், எசுப்பானியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூத்தரன்
அருளாளர் பட்டம்ஏப்ரல் 24 1614, ரோம் by திருத்தந்தை ஐந்தாம் பவுல்
புனிதர் பட்டம்மார்ச் 12 1622, ரோம் by திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
முக்கிய திருத்தலங்கள்எசுப்பானியா நாட்டில் உள்ள மங்கள வார்த்தை மடம்.
திருவிழாஅக்டோபர் 15
சித்தரிக்கப்படும் வகைகுத்தப்பட்ட இதயம், எழுது கோல், புத்தகம்
பாதுகாவல்எசுப்பானியா, உடல் நோய், தலைவலி, துறவிகள்

குறிப்புகள் தொகு

  1. இவர் இறந்த அந்த இரவில் எசுப்பானியா யூலியின் நாட்காட்டியிலிருந்து கிரெகொரியின் நாட்காட்டியை பின்பற்றத் தொடங்கியது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிலாவின்_புனித_தெரேசா&oldid=3719415" இலிருந்து மீள்விக்கப்பட்டது