தெற்குக் சகோதரர் தீவு

தெற்குச் சகோதரர் தீவு (South Brother Island ) என்பது இந்தியப் பெருங்கடலில் மக்கள் குடியேறாத ஓர் தீவாகும், இது அந்தமான் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சிறிய அந்தமான் தீவுக்கு வடகிழக்கில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கன் கணவாயில் அமைந்துள்ளது. இது இந்திய ஒன்றியப் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தெற்கு அந்தமான் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த தீவு தோராயமாக பீன் வடிவத்தில் உள்ளது, சுமார் 1800 மீட்டர் முதல் 630 மீ வரை, வடக்கு பக்கத்தில் ஒரு பரந்த விரிகுடா உள்ளது. இது கிட்டத்தட்ட தட்டையானது. மேலும், இது அடர்த்தியான மரங்களால் சூழப்பட்டுள்ளது. ஒரு குறுகிய கடற்கரையால் சூழப்பட்டுள்ளது. இட்தீவின் மத்திய பகுதி புயல் காலங்களில் ஒரு ஏரியாக மாறுகிறது. இந்த தீவில் 1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 1.24 கிமீ பரப்பளவு கொண்ட 2 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளது. [1]

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கடல் ஆமைகளைப் பிடிக்க எப்போதாவது தீவுக்கு வரும் ஒங்க் பழங்குடியினரை பார்வையிட்டது; ஒரு பயணி 30 பேரை கொண்டிருக்கும் "மூங்கிலால் வேயப்பட்ட கட்டில்களுடன்" சில குடிசைகளைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கிறார். பெரிய அந்தமானியர்களுடனான மோதல்களில் தீவு அவர்களின் வரம்பாகத் தெரிந்தது. [2] 1890 முதல் 1930 வரை, பெரிய அந்தமானிய பழங்குடியினரை அடுத்து, தெற்கு பெரிய அந்தமான் தீவுக்கு ஓங்க் விரிவாக்கத்திற்கான பாதையின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது. [3]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Government of India, Directory of Wildlife Protected Areas in India பரணிடப்பட்டது 25 ஆகத்து 2003 at Archive.today. Accessed on 2012-07-03.
  2. M. V. Portman (1899), A history of our Relations with the Andamanese, Volume II. Office of the Government Printing, Calcutta, India.
  3. George Weber (~2009), The Tribes பரணிடப்பட்டது 2009-03-02 at the வந்தவழி இயந்திரம். Chapter 8 in The Andamanese பரணிடப்பட்டது 5 ஆகத்து 2012 at the வந்தவழி இயந்திரம். Accessed on 2012-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்குக்_சகோதரர்_தீவு&oldid=3791673" இலிருந்து மீள்விக்கப்பட்டது