தெற்கு நன்னகரம் முப்பிடாதியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தெற்கு நன்னகரம் முப்பிடாதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், தெற்கு நன்னகரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஸ்ரீ முப்பிடாதியம்மன் திருகோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:நன்னகரம், தெற்கு நன்னகரம், தென்காசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தென்காசி
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
தாயார்:ஸ்ரீ முப்பிடாதிஅம்மன்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

== வரலாறு == தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு பாத்தியபட்ட இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சித்திரை மாதம் வரும் முதல் வார செவ்வாய் கிழமையில் பந்தகால் நடப்பட்டு திருவிழா தொடங்குகிறது.அன்றைய தினம் அருவி தண்ணீர் எனும் தீர்த்த நீர் கொண்டுவருவதற்கு, பால்குடம் எடுப்பதற்கு, முளைப்பாரி எடுப்பதற்கு என வேண்டுதலுக்கு காப்பு கட்டுதல் நடைபெறுகிறது.இரண்டாம் செவ்வாய் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.அன்று அதிகாலையில் குற்றாலம் அருவிக்கு மேல காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கானோர் நடைபயணமாக சென்று, செண்பகாதேவி அருவியை அடைந்து அங்கிருந்து இன்னும் மேல சென்று தேன் அருவிக்கு அருகில் இருக்கும் தடாகத்தில் அம்மனுக்கான தீர்த்த நீர் கொண்டுவரப்படுகிறது.அடுத்ததாக உச்சிகால பூஜை முடிந்து பால்குடம் ஊர்வலம் நடைபெறுகிறது.இரவு முளைப்பாரி ஊர்வலமும். நடுநசியில் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீமுப்பிடாதி அம்மன் னின் வீதி உலாவும் நடைபெறுகிறது. அதிகாலையில் அம்மன் கோவிலை சப்பரம் வந்தடைகிறது. அன்று காலை மஞ்சள் தண்ணீர் குளியல் எனும் சுடுநீர் குளியல் சாமியாடிகளால் ஆடப்படுகிறது. மூன்றாம் செவ்வாய் எட்டாம் பூஜை நடைபெற்று திருவிழா இனிதே நிறைவடைகிறது. அன்றுடன் ஊர்குடும்பரின் ஒரு வருட பதவிகாலம் முடிவடைந்து, அடுத்த வருடத்திற்கான ஊர்குடும்பர் தேர்வு செய்யபடுகிறார்.அடுத்த வருடம் ஸ்ரீமுப்பிடாதி அம்மன் திருவிழா அவர் தலைமையேற்று சிறப்பாக நடத்துவார்.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் முப்பிடாதிஅம்மன் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. நவராத்திரி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)