தெலங்காணா அரசு சின்னம்

தெலங்காணா அரசு சின்னம் ( Emblem of Telangana ) என்பது தென்னிந்தியா மாநிலமான தெலங்காணா அரசின் சின்னமாகும். இந்தச் சின்னத்தின் நடுவில் பச்சை நிறத்தில் காக்கத்திய தோரண வாயிலும், அதனுள் சார்மினாரும் உள்ளன.[1][2]

தெலங்காணா அரசு சின்னம்
விபரங்கள்
பாவிப்போர்தெலங்காணா அரசு
உள்வாங்கப்பட்டது2014
Crestஇந்திய தேசிய இலச்சினை
விருதுமுகம்காக்கதிய தோரண வாயில், சார்மினார்
குறிக்கோளுரை"सत्यमेव जयते" (சத்யமேவ ஜெயதே,
Useமாநிலச் சின்னம்

வரலாறு தொகு

இந்தச் சின்னம் ஓவியர் லக்ஷ்மன் ஏலே என்பவரால் வடிவமைக்கப்பட்டது.[3] கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தால் 2014 சூன் 2-இல் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த சின்னம் குறித்த கோப்பு ஆகும். முதலில் சார்மினார் சேர்க்கப்படவில்லை, ஆனால் அசதுத்தீன் ஒவைசி, (ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் AIMIM தலைவர்) ஆலோசனைக்குப்பின், அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சின்னம் தொகு

இதில் காக்கத்திய தோரண வாயில், சார்மினார், சாரனாத் சிங்கம் ஆகியவை உள்ளன. சிங்க உருவத்தின் கீழே சமசுகிருதத்தில் சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் உள்ளது. இவற்றைச் சுற்றியுள்ள வட்டத்தில் ஆங்கிலத்தில் "Government of Telangana" என்றும், "தெலங்காணா சர்கார்" என்று உருது மொழியிலும் "தெலங்காணா பிரபுத்துவம்" என தெலுங்கிலும் எழுதப்பட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு